பக்கம்:தாய் மண்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

“இவுங்களுக்கு இதே வேலைதான் நீங்க பாட்டுக்குப் பாயசத்தைச் சாப்பிடுங்க, தமிழரசி!’ என்றாள் சிவகாமி,

“அம்மா, நீங்களும் சரி ஐயா, நீங்களும் சரி, என்ன இனிமே நீங்க ரெண்டு பேரும் ஏக வசனத்திலே சாதாரணி மாய்க் கூப்பிடுங்க. அதுதான் எனக்கு மனசுக்கு ஆறுதல் தரும்!... ஆமாங்க!’ என்று நெடுநேரமாகச் சொல்ல வேண்டு மென்றிருந்ததைச் சொல்லிவிட்டாள்.

கெட்டிக்காரி! “நீ மோகன்தாஸைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மதர் சோன்னங்களே!...” என்று குறுக்கிட்டார்’ சொக்கநாதன்.

“என் ஜன்மத்தோட ஒட்டின துரதிர்ஷ்டம் அந்தப் பாக்கியத்துக்கும் உலை வைத்துவிட்டதுங்க!...” என்றாள் அவள்,

“என்னம்மா, சொல்லுறே? மோகன்தாஸ் வலிய வந்த சீதேவியைக் காலால் எட்டியா உதைத்துவிட்டார்!’ என்று சினம் ஏந்தி வினவிஞர்.

“அவருக்கு முன்னமேயே யாரோ காதலி ஒருத்தி இருக்கு, துங்களாம், ஐயா!’

“மதருக்கு இந்த விஷயம் தெரியுமா?” ‘ஊஹாம், அவங்களுக்குத் தெரிஞ்சால், வருந்துவாங்க. அதேைலதான் அவங்களைப் பார்க்கப் போகாமல்கூட ஒளிஞ்சுகிட்டு இருக்கேன். கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கிற தோதுடன் வாம்மான்னு சொன்னங்களே மதர்! அந்தத் தோதுக்கு இருந்த வழி அடைபட்டுப் போயிடுச்சுங்களே!... இப்ப அவங்ககிட்டே போய் என்னத்தை நான் சொல் வேனுங்க?” - -

“அதுக்கென்னம்மா... கூடிய சீக்கிரமே இன்விடேஷன் அடிச்சிடலாம்!... எஸ். எஸ்... ம்... ஒ. கே!’ முன்பகுதியை அவளுக்குச் சொல்லிவிட்டு, பின் பகுதியைத் தமக்குச் சொல்லிக் கொண்டார். தானே மாப்பிள்ளையை முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/236&oldid=664051" இலிருந்து மீள்விக்கப்பட்டது