பக்கம்:தாய் மண்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

செய்வதாகத் தெரிவித்துக் கெடு கேட்ட தலைவி திலகவதியின் அன்பை அவள் ஆராதித்தாள்.

சொக்கநாதன் தொலைபேசிக் கருவியின் எண்களேச் சுற்றிஞர். இரண்டு மூன்று முறைச் சுற்றிப் பார்த்தபின் *ரிவnவரை அலுப்புடன் வைத்தார்.

“ஐயா, எனக்குக் கொஞ்ச நாள் அமைதி தேவைப் இதையேதான் நான் எங்க மதர்கிட்டே சொல் ருக்கேனுங்க!’ என்று தீர்மானத்தின் பிடிப்புடன் அவள் முத்தாய்ப்பிட்டாள். பிறகு, அவள் அண்இந்து பார்த்தாள், ஏதோ சிந்தித்த பாவனையில்.

பெரிதாக்கப்பட்ட படம் ஒன்று அவள் பார்வையை சர்த்தது. நடுத்தர வயசுடன் ஒருவர் இாணப்பட்டார். அழகான உருவம்.

துண்டு கொண்டு கழுவாயின் கண்ணிரைத் துடைத்துக் கொண்டார் சொக்கநாதன். பிறகு, தமிழரசியைப் பார்த்தார்.

‘தமிழரசி, ஏனம்மா அப்படிப் பார்க்கிறே அந்தப் படத்தை?...’ என்று சோபாவின் அடிப்பகுதி வரை இடுப்பை நகர்த்திச் சாய்ந்த வண்ணம் வினவினர். பிறகு, அதே மூச்சோடு அவராகவே பேசவும் செய்தார்.

‘அந்தப் படத்தில்தான் நான் கண்ணுரக் கண்ட தெய்வம் இருக்குது. தெய்வம் தெய்வமாக இருக்கிறதிலே அதிசயமில்லை. மனிதன் தெய்வமாய் இருக்கிறதுதானே அதிசயம்! அப்படியொரு அதிசயம்தான் அம் மனிதர். அந்த ஆள் எனக்குத் தோழர். ஒட்டாண்டியாய்ச் சுற்றிக் கிட்டிருந்த எனக்கு அன்புப்பிச்சையிட்ட நல்ல மனிதர் அவர். அவர் பிஸினஸில் எனக்கும் சட்ட ரீதியாகப் பாதிப் பங்கு கொடுத்து என்னையும் முன்னேறச் செஞ்ச தீரர் அவர்.

‘வயசிலே எனக்கு அவர் தம்பியாய் இருந்தாலும், பாசம் காட்டுறதிலே எனக்கு அவர் அப்பாவாயிருந்தார். அவர் கதை பெரிசு, எனக்கும் அவருக்கும் உள்ள கதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/237&oldid=664052" இலிருந்து மீள்விக்கப்பட்டது