பக்கம்:தாய் மண்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

பெரிசு!... ஒரு தரம், அவரோட கல்யாண சம்பந்தமாய்ப் பேசிக்கிட்டே நாங்க ரெண்டு பேரும் சென்ட்ரல் ஸ்டேஷனண்டை நடந்தோம். வழி மறிச்ச லாரி ஒன்று என் ைஅரைச்சுப் போட ஓடி வந்திருக்கு. நான் கவனிக்கலை. அவர் சவனிச்சிட்டார். உடனே, குறுக்கு மறிச்சுப் பாய்ந்து என்னேக் காப்பாற்றிட்டார். அதுக்குப் பரிசாக அவர் தன் ளுேட உயிரையே காவு கொடுத்திட்டார்; என் உயிர் நண்பரை ஜீவன் பிரிகிற மட்டும் என்னலே மறக்கவே. முடியாதம்மா!...

இவ்வாறு, அவர் தழலாய்க் கனிந்து, தண்ணிராய் உருகிச் சொன்ன நடப்பையும் அவள் மறக்க முடியா தல்லவா? இப்படிப்பட்ட நல்லவரைப் பத்திக்கூட அபவாதம் கிளப்பிவிட லோகத்திலே ஜனங்கள் தயாராகக் காத்துக்கிட்டுத்தான் இருக்கிருங்க. தவறுகள் செய்தவன் திருந்தில்ைகூட, உலகம், அவன் முன்பு செஞ்ச தவறுகளைத் தான் நினைச்சுக்கிட்டிருக்கும் போலிருக்குது; திருந்திவிட்ட புதுக் கதையைப்பற்றிச் சட்டை செய்யாது போலிருக்குது: வேடிக்கையான உலகம்! விந்தையான உள்ளங்கள்!...”

பஸ் வந்து விட்டது.

“மங்கள பவன"த்துக்குப் பறந்த மனப்பறவை திரும்பியது.

தமிழரசி ஏறி அமர்ந்தாள். சற்றைக்கெல்லாம். அவளுடைய தோழி கதீஜா பேகம், காது வளையங்கள் குலுங்க வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள். நுங்கம் பாக்கத்தில் ‘நர்விங் ஹோம்’ ஒன்றில் ஜலஜா அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவளைப் பார்க்கப் போவதாகவும் செய்தி சொன்னுள். நீங்களும் வருகிறீங் களா, டீச்சர்?’ என்றும் கேட்டாள்.

விழி சிமிட்டும் நாழிகைக்கு அவள் மெளனம் சாதித் தாள். கதீஜாவிடம் தன்னக் கீழ்த்தரமாக மதித்து ஏசிய பேச்சைக் கதீஜா மூலம் கேள்விப் பட்டதிலிருந்து ஜலஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/238&oldid=664053" இலிருந்து மீள்விக்கப்பட்டது