பக்கம்:தாய் மண்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

வைச் சந்திக்க வேண்டும்; அது சம்பந்தமாக வம்பு வளர்க்க வேண்டும் என்றுதான் அவள் காத்திருந்தாள். அவளது ஆத்திரத்துக்கு, முன்பொரு தினம் வீடுதேடி வந்த அம்ை தேயக் கடிதமும் தூபம் போட்டுக் கொண்டிருந்தது. இரட் டிப்பான கோபத்துடன் ஜலஜாவை எதிர் நோக்கியிருந்த நேரத்தில், அவளை எதிர் நோக்கிச் சென்றது வியாதி. ஒழுக்கத்தை அவள் மதிக்கவில்லை; ஆனல், நோய் அவளே மதித்துவிட்டது!’

பஸ் புறப்பட்டது.

டிக்கட்டுகள் சகிதம் கண்டக்டர் வந்தார்.

கதிஜாவை முந்திக் கொண்டு, தமிழரசி இரண்டு டிக்கட்டுகள் வாங்கிள்ை. அவளிடம் ஒரு டிக்கட்டை நீட்டி ள்ை. ஆனல், அவள் இறங்கிய இடத்திலேயே தமிழரசியும் இறங்கி விட்டதைக் கவனித்த கதீஜா பெரிதும் வியந்தாள்.

‘நானும் ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்க வேணும்னு தான் இருந்தேன். ஆனாலும், ஜலஜா என்ன ஏசிய தப்புப் பேச்சுக்கள் என்னைத் தடுத்திட்டுது. நானும் கேவலம் சாதா ரணமான மானுடப் பிறப்புதானே? எனக்கு மட்டும் மனக் கொதிப்பு உண்டாகாதா, அவள் பேச்சையும் ஏச்சையும் கேட்டு?... ஆனாலும், ஜலஜா மாதிரி மனப் பலவீனம் வேறே யாருக்கும் வரமுடியாது! வரவும் வேண்டாம்! அந்தப் பல வீனத்தைத்தான் பெரிய மனம்பலம்னு ஜலஜா நினைச்சுக் கிட்டிருந்தாள். இப்போ, ஏமாந்தாச்சு!... மனம், கற்பு, சமூகம் என்கிற பதங்களுக்குரிய உண்மையான மதிப்பு இப்போவாகிலும் ஜலஜாவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக் கிறேன்! எனக்கு முன்கோபம் ஜாஸ்தி. அது ஒரு குறை தான்! ஆலுைம், எனக்கு இதயம்னு ஒண்னு இருக்குது. அதேைலதான் இப்போ நான் உங்களோட வந்துகிட்டிருக் கேளுக்கும்!...” என்று நடையைத் தொடர்ந்து, பேச்சையும் தொடர்ந்தாள்.

ஏரிக்கரைப் பகுதி விரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/239&oldid=664054" இலிருந்து மீள்விக்கப்பட்டது