பக்கம்:தாய் மண்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கதை. பாரம்பர்ய வழிகளிலே பற்றுக் கொண்ட வர்கள் நாம். ஆகவே, இப்படிப்பட்ட தொடர்பின் பிணைப்புக்களையும், பிணைப்புக்களின் இணைப்புக்களை பும் நாம் நம்புகிருேம்; நம்பவேண்டியவர்களாகவும் ஆகிருேம்.

நான் உங்களைச் சந்தித்தேன். நீங்கள் என்னைச் சந்தித் தீர்கள். நம் சந்திப்பில் புனிதமான பாசமும், கண்ணியம் மிகுந்த அன்பும் தம்மை அறியாமலே நம்முள்ளே முகிழ்த்திருக்க வேண்டும். இல்லையென்றால், சதா தங்களைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருக் கும் ஓர் உள்ளுணர்வுத் துாண்டுதல் என்னுடன் வளர்ந்திருக்க முடியாது!

என்னைப்போலவே, உங்களுக்கும் இத்தகைய துரண்டுதல் உண்டாகியிருந்தால், அது என் எதிர் காலத்திற்கு-நம் எதிர் காலத்திற்கு வாய்த்திட்ட ஒரு நல்ல சகுனம் போலத்தான்.

நான் இதுவரை எழுதி வந்த வாசகங்கள் என் இதயத்தைத் தங்களுக்குச் சொல்லியிருக்கும் என்றே ஊகம் செய்கிறேன்.

என் ஊகம் அவ்வளவு கச்சிதமாக அமையா மலும் இருக்கலாம். வெறும் வார்த்தைகளால் ஒர் இதயத்தை அளந்துவிட, அல்லது எடைபோட்டு: விட முடியாதுதான்.

ஆகவே, நான் விஷயத்துக்கு வருகிறன். நான் தங்களே மனத்தால்-அன்பால்-பாசத். தால்-பண்பாட்டால்-புனிதத்தால்-சத்தியத்தால் நேசிக்கிறேன். காதலிக்கிறேன்’ என்பதைக் காட்டி லும் நேசிக்கிறேன்’ என்ற பதச்சேர்மானத்தில் தான் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது.

உங்களது அன்பான மறுமொழி வேண்டும்.

தங்கள் அன்பு மிக்க, அம்பலவாணன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/24&oldid=664055" இலிருந்து மீள்விக்கப்பட்டது