பக்கம்:தாய் மண்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

அவர்கள் தென் வசத்தில் நடையைத் திருப்பினர்கள். புன்னை மரங்களின் நிழலில் ஒரு கும்பல் கூடியிருந்தது. விலகிச் சென்றபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டே தோழிமார் இருவரும் நடந்தார்கள். இருவரின் துணையுடன் மூன்றாவதாகக் காற்றும் துணை சேர்ந்தது. கதீஜாவின் ‘ஆர்லான் வாயல் மஞ்சள் வெயிலுக்குக் கண்பொருத்த மாகத் திகழ்ந்தது. தமிழரசியின் முறிமேனி மாலை ஒளியில் ஒளிர்ந்தது.

மர நிழற் கூட்டத்தில் திடீரென்று சூடு பிடித்துவிட்டது போலிருக்கிறது. நடப்பு புகைந்தது. விஷயம் இதுதானும்; சேரிக்கன்னி ஒருத்தியை ஒர் இளசு ஆசை காட்டி மோசம் செய்ய முயன்றிருக்கிருன். உடனே, கைமேல் பலகை அந்தப் பாவிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்து விட்டா ளாம் அவள். அவனுடைய பற்களின் பட்டியலில் நான்கோ ஐந்தோ காணவில்லையாம்!

அவர்கள் இருவரது காலணிகளின் அடிச்சுவடுகள் பதிந்து சென்றன. : தமிழரசியின் கல்யாணத் திட்டத்தை அறிய விரும் பினள், தோழி.

‘இப்போதைக்கு நான் என் கல்யாணத்தைப் பற்றி நினைப்பதாக இல்லை. உங்க காதிலே விழுந்திருக்கலாம். மிஸ்டர் மோகன்தாஸுக்கு முன்னமேயே காதலி காத்துக் கிட்டிருக்காம். எனக்கு அது பின்னலேதான் தெரிய வந்திச்சு. ஜலஜா உங்ககிட்டே என்னைப்பற்றித் தப்பாய்ப் பேசிள்ை!... ஆன, என்னேட இந்த நிலைமை-அதாவது, என் மனக்கனவு எனக்குத் தோல்வியை உண்டாக்கி விட்ட இந்த நிலைமை-ஜலஜாவுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான அகம்பாவத்தைத்தான் கொடுக்கும்!... கொடுக்கட்டுமே!... எனக்குப் புரியாமலில்லை! ஆனால், என்றாவது ஒரு தினம் இந்தத் தமிழரசியை உலகம் புரிஞ்சுக்கத்தான் செய்யும்: என் மனம் என் கையிலே! என் விதி என் பிடியிலே!... பார்க் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/240&oldid=664056" இலிருந்து மீள்விக்கப்பட்டது