பக்கம்:தாய் மண்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

கலாமே!...” என்று ரோஷமாகப் பேசித் தீர்த்தாள், தமிழரசி.

கதீஜாவுக்கு விரைவிலேயே நாகூரில் “நிக்காஹ் நடை பெற்று விடுமாம்!

ஜலஜாவுக்கு வேலே போய் விடுமாம்!-ரகசியம், ரகசியம்!...

‘நர்விங் ஹோம் வந்தது. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். ஒய்வு வே & யான த ல், பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது.

அந்தக் கூடத்தின் கோடியிலிருந்த கட்டிலில் படுத்திருந் தாள் குமாரி ஜலஜா. அவள் முகம் அலங்கோலமாக வெளுத்துக் கிடந்தது. காலடியோசை கேட்டதும் அவள் கண்களே மலரத் திறந்தாள். முதல் தொடுப்பில், அவள் பார்வையில் தமிழரசிதான் கம்பீரமாக விழுந்தாள். அவ் வளவுதான். தட்சணமே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ‘வாங்க, தமிழரசி,... வாங்க, கதீஜா!’ என்று முகமன் மொழிந்தாள். இருவரையும் கட்டிலிலேயே அமரும்படி கேட்டுக் கொண்டாள்.

‘உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு?... உங்க தோற்றமே உருமாறிப் போயிட்டுதே!” என்று வருந்தினுள், தமிழரசி,

‘இப்போ கொஞ்சம் தேவலாம்!...” என்று சொல்லிய ஜலஜா, இருந்திருந்தாற்போல, தமிழரசியின் கைகளைப் பரிவு சேரப் பற்றிக் கொண்டு, ‘உச்சர்! தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க!... உங்க கையைத் தொடக்கூட எனக்கு அருகதை இல்லை!... உங்களோட மனத் துணிவு, மனச் சுத்தம், மனப் பண்பு-இதுகளுக்கு முன்னலே நான் ஒரு அற்பம்!... இந்தச் சில நாளாத்தான் எனக்கு உலகமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/241&oldid=664057" இலிருந்து மீள்விக்கப்பட்டது