பக்கம்:தாய் மண்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இன்னதின்னு தெரிய ஆரம்பிச்சிருக்கு உச்சர்!...” என்று சொல்லிக் கலங்கிளுள்.

தமிழரசி மெளனமாகக் குந்தியிருந்தாள்.

பிறகு, கதீஜாவின் பக்கம் திரும்பி அவளைக் குசலம் விசாரித்தாள். அவளும் பதில் சொன்னுள்.

இருவருக்கும் நல்ல காபி கிடைத்தது. இருவரும் ஜலஜாவிடமிருந்து பிரிந்து திரும்பினர்கள்.

ஜார்ஜ் டவுன் வந்தததும், தமிழரசியும் கதீஜாவும் திசைமாறிப் பிரிய வேண்டியவர்கள் ஆயினர்.

தமிழரசி வீட்டை அடையட்டும் என்று பெருமனம் கொண்டு காத்திருந்தாற் போன்று அந்தியும் சாய்ந்தது.

பர்மா பஜாரை வேடிக்கை பார்த்த பின்னர், அவள் வீட்டைத் திறந்து விளக்குப் பொத்தானை அழுத்தினுள். உள்ளே இருந்த வாக்கிலே வெளியே எட்டிப் பார்த்தாள். எதிர் வீட்டில் பரபரப்பானதொரு சூழல் உருவாகியிருந்ததை அவளால் காண முடிந்தது. விசாரித்ததில், தகவல் கிடைத். தது. புதிதாகக் கல்யாணம் செய்து கொண்டு புதிதாகக் குடித்தனம் வைத்த ஜோடியில் பெண்ணுக்கு உடல் நிலை கவலேக்கு இடமாக இருக்கிறதாம்-மனைவியின் நிலைகண்டு நிலைகுலைந்து கதறினன் புருஷன். அவன் அழுகை அவன் மனத்தில் எதிரொலித்தது.

எதிர் வீட்டை அடைந்தாள் தமிழரசி. டாக்டர் ஊசி மருந்தைச் செலுத்தி முடித்தார். புதுமணத் தம்பதிகள் என்னும் மெருகு மங்கிக் கானப் பட்ட அத்தம்பதியை அவள்-தமிழரசி நோக்கினள். அப் பெண் அவனைச் சோதித்துவிட ஆசைகொண்டு தான் இன்னமும் கண்களைத் திறக்காமல் இருக்கிருளா? அவளுக்கு அவன் பேரில் கோபமா? அவன் பாவம், மண்டையில் அடித்துக் கொண்டு கதறினன். அவளது சாந்தம் நிறைந்த வதனத்தைத் தொட்டுத் தொட்டுக் கதறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/242&oldid=664058" இலிருந்து மீள்விக்கப்பட்டது