பக்கம்:தாய் மண்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

தமிழரசியின் மனம் சஞ்சலப்பட்டது. “நான் ஒரு வேளை இம்மாதிரி படுக்கையில் படுத்துக் கண்களை மூட நேர்ந்தால், எனக்காக கண்ணிர் சிந்துபவர்கள் எவ்வளவு பேர் இருப் பார்கள்?’ என்றதொரு விபரீதமான கேள்வியை அவள் தன்னுள் எழுப்பிக் கொண்டாள். இல்லத் தலைவியின் தலைமையில் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. கடை சியில், அவள் தனக்குத்தானே ஆறுதல் பூத்த பெருமிதத் துடன் சிரித்துக் கொண்டாள்,

அதே நேரத்தில், அந்தப் பெண்ணின் கணவனும் அமைதி: யாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தான்!. இனி அவனுக்குக் கவலையில்லை.

தமிழரசி மகிழ்ந்தாள். அவள் நிம்மதியுடன் அங்கிருந்து குறுக்கே மறித்து நடந்: தாள். வீட்டிற்கு வந்தாள். டிசம்பர் லீவு முடிந்ததும், நடத்தப்பட வேண்டிய பாடங்களுக்குக் குறிப்பு எழுதினுள். “இல்வாழ்க்கை - ஏலாதி - தி ரு ம ரு க ல் நிகழ்ச்சி - தங்கைக்குக் கடிதம் - இப்படி எழுதிக்கொண்டே போனுள். வகுப்புக்களும் பாடங்களும் கூடி விலகிக் கொண்டே இருந்தன!

சடக்கென்று பேணுவைக் கீழே போட்டாள். எதையோ நினைத்துக் கொண்டவள் போல, அப்படியே பிரமை தட்டி. உட்கார்ந்திருந்தாள். அவளது அழகிய முகம் வெளிறியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் தன்னுடைய இருதயப் பகுதியை விரல்களால் அழுத்தினுள். மூச்சை அடைப்பது போலிருந்தது. வேர்வை கொட்டியது. அடுத்த இரண்டொரு நிமிஷங்களில் அவள் தெளிவு பெற்றாள். “தெய்வமே!...” என்று அழைத்தாள்.

அவள் எழுந்து வீட்டைப் பூட்டினள். தெய்வம் அழைத்ததோ? பாலமுதம் அருந்த ஒடும் மழலையாக அவள் விரைவு பாய்ச்சி நடந்தாள்.

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் தரு. வாளாமே? உங்களுக்குத் தெரியுமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/243&oldid=664059" இலிருந்து மீள்விக்கப்பட்டது