பக்கம்:தாய் மண்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா!”

இருபத்தொன்பது

பூநீகாளிகாம்பிகை த் தாயைச் சேவித்துவிட்டுத் திரும்பிய போது, தமிழரசியை எதிர்நோக்கிப் புதிய அதிசயமொன்று காத்திருந்தது. அவள் படிக்கட்டில் ஏறியபோதுதான், நந்தி யாக வழி மறித்து நின்ற காரைப் பார்த்தாள், அவள். உடனே, ‘அம்மா!’ என்று மகிழ்வுக் குரலெடுத்து விளித்தாள்.

வேண்டிய வரம் ஈந்துவிட்டாளோ, உலகாளும் அன்ன!... -

முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கஸ்துாரி அன்னை அணுதை இல்லத்தின் தலைவி குமாரி திலகவதி அம்மையார் மெல்லத் தலையை நீட்டிக் கண்ணுடிக் கதவின் இடுக்கு வழி யாகப் பார்த்தாள். கதவைத் திறந்துகொண்டு இறங் கிள்ை.

அதற்குள் தமிழரசி பூட்டைத் திறந்தாள். வீடு தேடி வந்த அன்னையைக் கண்டதும், அவளுக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஒடவில்லை. சாவித்துவாரத்தை “வாகு பார்த்துப் பொருத்தித் திறப்பதற்குள்ளாக, அவள் திணறிப் போளுள். என்றாலும், கடைசியில், அவளே வென்றாள். விளக்குகள் ஒளியை உமிழ்ந்தன.

‘வாங்க, மதர்!’ என்று மரியாதையுடன் வரவேற்றாள். தேக்கு நாற்காலியை எடுத்து முன் வசமாகப் போட்டாள். மேலாக்கைக் கொய்து எடுத்துப் போட்டுக் கொண்டாள். திலகவதி கொண்டை வலையை இடது கையால் அழுத்திய :படி நாற்காலியில் குந்தினுள். ... . . .

ஆகாஷ் வாணியின் சென்னை வானொலி நிலையம் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தது. அதன் அலைகள் சாளரக் கம்பிகளின் வழியே உட்புறத்தே நுழைந்து விலகின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/244&oldid=664060" இலிருந்து மீள்விக்கப்பட்டது