பக்கம்:தாய் மண்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

தாயின் காலடியில் பாசத்தோடும் அன்போடும் நின்று. கொண்டிருக்கும் மகளைப் போல, தமிழரசி இல்லத் தலைவியின் காலடியில் நின்றாள்.

அவளை ஆதரவு கொழிக்கும் பார்வையால் அளந்த திலகவதி, அவளது பூங்கரங்களைப் பிடித்து, அழகிய சிவப்பு விரல்களைப் புஷ்பங்களை வருடுவது மாதிரி பவ்யமாகத் தடவிக் கொடுத்தபடி, “என்னம்மா தமிழரசி! நீ உன் மதரை மறந்திட்டீயம்மா?...’ என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட் டாள். தலைவியின் வின அவள் நெஞ்சைச் சுண்டி இழுத்தது. “என்னை மன்னிச்சிடுங்க, மதர்!... உங்களைப் பார்க்கிற துக்கு வரணும்னு பலமுறை நினைச்சேன். ஆனால், என்னை யும் அறியாமலேதான் நான் வர முடியாமல் இங்கேயே தங்கிட நேர்ந்திட்டுதுங்க!... நான் அங்கே வராமல் இருந்தாலும், என் மனசு நீங்க வளர்த்து ஆளாக்கின. இந்த மனசு - சதா சர்வ காலமும் உங்களையேதான் சுத்திக்கிட்டு இருந்திச்சுங்க அம்மா!...” என்று உண்மையை ஒப்புவித்தாள்.

ஒரு நாள், மோகன்தாஸைச் சந்தித்துப் பேசிக் கொண்டி ருக்கையில், வழக்கம்போல அவள் இல்லத் தலைவியைப்பற்றிப் புகழ்ந்துரைத்துக் கொண்டிருந்தாள். அதைக் கேட்ட அவன், *ஏதேது, உங்களுக்கு உங்க மதரைப் பற்றி மணிக்கு மணி பேசாமல் போனல், உங்க மண்டை வெடிச்சிடும் போலி ருக்கே!... நீங்க உங்க இல்லத்துத் தாய்க்கிட்டே வச்சிருக்கிற அன்பும் பாசமும் இவ்வளவு மகத்தானதாக இருக்குதே! இவ் வளவு தூரம் உங்க மனசைக் கவர்ந்த அந்த தெய்வத்தாயை நானும் ஒரு முறை சந் திச்சு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்க வேணும்னு விரும்புகிறேன், தமிழரசி’ என்று தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டான், அவன். - .

அந்தச் சம்பவத்தை எண்ணி ஆறுதல் கொண்ட நிலையில் அவள் அம்மையைப் பார்த்தாள். .

தலைவிக்குச் சொந்தமான கண்களின் கோடியில் நீர் இருக்கக் கண்டாள். அவள் உடல் குலுங்கி அடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/245&oldid=664061" இலிருந்து மீள்விக்கப்பட்டது