பக்கம்:தாய் மண்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பின்னர், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்கை எடுத்தாள்.

“மதர், இருங்க. ஒரு செகண்டிலே வந்திடறேன்!” என்று புறப்பட முனைந்தாள்.

“உன் எண்ணத்தை நான் செகண்ட் பண்ணமாட்டேன், தமிழரசி!... அம்மா, எனக்கு உன் அன்புதான் தாயே வேணும். காபி ஒண்ணும் வேண்டாமம்மா!’ என்று உணர்வுகளைச் சொற்களாக்கினுள் திலகவதி.

மொழிக்கிளர்ச்சிப் புயல் வீசிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படித்தான் அம்மையார். தமிழரசியைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள். ‘உன்னைத் தேடி வந்ததம்மா! அதனல் தான், உன்னத் தேடி வந்துவிட்டேன்!” என்றாள். அப் போதும், இதுபோலத்தான் காபி எதுவும் வேண்டாமென்று மறுதளித்தாள். தலைவி என்றால் அந்த இல்லத்திற்குள்ளே ஒரு தனிப்பட்ட பயம்! தலைவி என்றால், இல்லத்திற்கு

வெளியே ஒரு தனித்த மரியாதை!...

“பாலாச்சும் கொஞ்சம்...’ என்று இழுத்தாள் தமிழரசி.

‘நீ என்னம்மா இப்படி இருக்கிறே? நமக்குள்ளே இந்தச் சம்பிரதாயம் அது இதெல்லாம் வேளுமம்மா!... நீ நல்ல சந் தோஷத்தோடஇருந்தால் அதுதான் அம்மா எனக்குமகத்தான ஆறுதலைத் தரும். அதுக்காகவேதான் நிதமும் நான் கவலைப் பட்டுப் பகவான வேண்டிக்கிட்டு இருக்கேன்!. தெய்வம் எனக்கு கொடுத்திருக்கிற எத்தனையோ குழந்தைச் செல்வங் களுக்குள்ளே நீதானம்மா செல்லமகள் செல்வத் தலை மகள்!...” என்று மெய்யுருகி மொழிந்த திலகவதி அம்மை யார், உணர்ச்சி வசப்பட்டு நின்ற தமிழரசியை வாரி அனைத்துக் கொண்டாள். - .

அவர்கள் இருவரது மேலாக்குப் பகுதிகளிலும் அங்கங்கே சரம் படிந்திருந்தது. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/246&oldid=664062" இலிருந்து மீள்விக்கப்பட்டது