பக்கம்:தாய் மண்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

அந்தப் பழைய ஞாபகத்தின் இனிய உணர்வின் தன் மயமான ருசிக் கலவையுடன் தலையை உயர்த்தினுள்

தமிழரசி,

‘இந்தத் தாய் எனக்கு இருப்பதே போதும் என்றுதான்கு என்னேப் பெற்ற அன்னையையோ, தந்தையையோ என் கண் களிலே கடவுள் காட்டவில்லையோ?” என்று மறுகிளுள் அவள்.

“உட்காரம்மா!’ என்றாள் தலைவி. அவள் பார்வை, சுவரில் கொலு வீற்றிருந்த தன்னுடைய புகைப்படத்தில் நிலைத்தது. பெருமிதம் கொண்டாள்.

பெருமையுடன் நின்று கொண்டிருந்தாள் தமிழரசி, பிறகு, அவள் உட்கார்ந்தாள். கோயிலுக்குப் போய்த் திரும்புகாலில் வாங்கி வந்த மாலைப் பத்திரிகையை மேலோட்டமாகப் புரட்டினள். பழமைப் பண்பாட்டினைப் போற்றிக் காப்பது எழுத்தாளர்களின் கடமையாகு மென்பதை வற்புறுத்திப் பேசிய மரபு வழித் தாகங்களைப் பற்றிய விவரங்கள் கண்டிருந்தன.

ஊதுவத்தி மணம் கமழ்ந்தது.

‘அம்மா!...”* -

தமிழரசி பத்திரிகையை மார்புற அனைத்தபடி, அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.

“எனக்கு வேண்டப்பட்ட பம்பாய்க் குடும்பத்தினர் வந்திருக்காங்க. அவர்களோடு சில இடங்களுக்கு போயிட்டு இல்லத்துக்கு வந்தேன். கொஞ்சம் பொறுத்து, திருவாளர் சொக்கநாதன் அவர்களைப் பார்க்கிறதுக்குப் புறப்படுவதாக இருந்தேன். எனக்குத் தெரிஞ்ச பம்பாய்க் குடும்பம் அவருக்கும் பரிசயமானது. வந்த விருந்தினர்களும் அவரைப் பார்க்க விரும்பினங்க. அப்பதான், அவர் தாலாவது தடவையாக என்ைேட டெலிபோனிலே பேச முயற்சி செய்திருக்கிறார். நல்ல வேளையாக, நான் அப்போது இருந்துவிட்டேன். அவர் என்ைேடு பேசினர். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/247&oldid=664063" இலிருந்து மீள்விக்கப்பட்டது