பக்கம்:தாய் மண்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

சொன்னர் விஷயங்களை எல்லாம்!... ஆமாம், அந்த ராணுவ வீரர் கடைசியிலே, இப்படிச் செஞ்சிட்டாரே அம்மா, தமிழாசி?...’ என்று சொல்லி வருந்தினுள் தலைவி. அப் பேச்சில், கேள்வியின் பாவம் குறைந்தும், கவலேவின் ஆட்சி மிகுந்தும் குரல் கொடுத்தது.

“அவருக்கு ரொம்பக் காலமாய் ஒரு காதலி இருக் கிருளாம். அவளைத்தான் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போருராம் அவர்!... என் விதிதான் என்னச் சுத்திக்கிட்டேயிருக்குதே மதர்!... ஆனால், மிஸ்டர் மோகன்தாஸின் கடமையையும், அதைப் பார்க்கிலும் அவரது காதலியோட கடகையையும் நாம் போற்றத்தான் வேணுமுங்க!...” என்று தண்ணளியின் இனிமை மிளிரப் பேசிளுள் அவள். அவள் தமிழரசி,

அலுங்காமல் குலுங்காமல் நிதானமாக நின்றெரியும் குத்து விளக்காகத் தமிழரசி விளங்கினுள்.

செயல் எல்லாமே என்

‘உன் எண்ணம், பேச்சு, மனசிலே ஒரு சரித்திரமாகவே இடம் பிடிச்சிட்டு வருகு தம்மா, தமிழரசி!” என்றாள் அம்மையார். தமிழரசியின் பண்பியன், தலைவியின் முகத்தில் பெருமையாக ஏற்றம் புரிந்தது!

தலைவி புறப்பட விரும்பினள்.

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு.

மோகன்தாஸ் வந்து நின்றா:ன். -

அவனை வியப்பு விரியப் பார்த்தாள், தலைவி. - தமிழரசி அவனை வரவேற்றாள். பிறகு, தலைவியிடம், “இவங்கதான் ராணுவ வீரர் மிஸ்டர் மோகன்தாஸ்’ என்று பழக்கப்படுத்தினுள். . . . . . . .

“ஓஹோ அப்படியா?” என்றாள் தலைவி. சிரிப்புக்கூட்ட முனைந்தன. உதடுகள். சிரிப்புப் பிறக்கவில்லை.

அப்போது : .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/248&oldid=664064" இலிருந்து மீள்விக்கப்பட்டது