பக்கம்:தாய் மண்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

ஊன்று கோல்கள் இரண்டிலும் உடம்பைச் சார்பு படுத்திக் கொண்டு, தலைவியை நோக்கிக் கைகள் இரண்டையும் பக்தியுடன் குவித்துக் கும்பிட்டான், அவன்.

உட்காரும்படி வேண்டினுள் தமிழரசி, மோகன்தாஸ் பேசினுன் : ‘உங்களை நேரிடையாகப் பரிசயம் இல்லையாளுலும், உங்களைப் பற்றி ரொம்ப தூரம் நான் அறிவேனுங்க!...”*

திலகவதி தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே, “அப்படியா?...’ என்று கேட்டுச் சிரித்தாள். அவன் பார்வை: இப்போது தமிழரசியின் பக்கம் இருந்தது. அம்மையின் சிரிப்பில் புதுத் தெம்பு ஊர்ந்தது. “ஓஹோ, எங்க தமிழரசி தான் உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லியிருக்கும்; ஏம்மா, அப்படித்தானே?...’ என்றாள் அவள்.

தமிழரசி மெளனப் புன்னகை புரிந்தாள்.

தமிழரசி தூக்க மாத்திரை சாப்பிடத் துணிந்த அந்தப் பயங்கரத்தைத் தொலைபேசி மூலம் சொல்லி, அவளுக்கு நல்ல புத்தி சொல்லி அவளைக் காக்கும்படி, தான் கவலையுடன் வேண்டிக் கொண்ட பழைய சம்பவத்தையும் அவன் நினைவூட்டினன். அரசாங்க அலுவலகத்தில் தலைவியை முதன் முறையாகப் பார்க்க நேர்ந்ததையும் அவன் தெரிவித்தான்.

சலனம் ஏதுமின்றி இருந்தாள் திலகவதி அம்மை. இரண்டு நிமிஷங்கள் நழுவின. ‘உங்க பேச்சு ரொம்பவும் அழகாக இருக்கிறது, மிஸ்டர் மோகன்தாஸ்’ என்று சொன்னுள். . -

அவன் முகம் ஏனே மாறியது. அவன் தமிழரசியின் விழிகளைச் சந்திக்கப் பயந்து கீழே தலையைக் கவிழ்த்தான். “மிஸ்டர் மோகன்தாஸ்: உங்களைச் சந்திச்சதிலே நான் ரொம்பவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நீங்க தாய் நாட்டுக்காகச் செஞ்சு காட்டின அருப்பெரும் சேவைக் காக எங்க இல்லத்தின் சார்பிலேயும் உங்களுக்கு நன்றி

தா. ம. 16 - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/249&oldid=664065" இலிருந்து மீள்விக்கப்பட்டது