பக்கம்:தாய் மண்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

கடிதம் உறைக்குள் அடங்கியது.

ஆளுல், வெய்துயிர்ப்பு அவள் மனத்தில் அடங்கவில்லை.

சிலிர்த்துச் சீறிக் குமுறிய எண்ணங்களையும் துணை வைத்துக் கொண்டு-உணவு கொண்டாள். கைக்கு

எட்டும்படி இருந்த டயரியைப் புரட்டியபடி சாப்பிட்டு எழுந்தாள்.

குடை விரிந்தது.

பாதை வளர்ந்தது.

மாலை அலுவல்கள் ஆரம்பமாயின.

உப பாடங்கள் போதித்தாள் தமிழரசி,

பள்ளிக்கூடம் முடிந்ததும், தமிழரசி திரு. வி. க. மண்ட பத்தை அடைந்தாள். பள்ளியின் நிறுவனர் அங்கு வருவ தாக ஏற்பாடு ஆகியிருந்ததால், எல்லா ஆசிரியைகளும் அங்கு வரவேண்டுமென்று சொல்லப்பட்டது. ஏனைய ஆசிரி யைகளும் வந்தார்கள்.

ஜலஜா மட்டும் வேண்டாத மருமகளின் முகம் காணப் பிடிக்காத மாமியாராக, வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

ஐந்து மணிக்குப் பள்ளியின் நிறுவனர் திருவாளர் சொக்கநாதன் அவர்கள் தம்முடைய வாடாமல்லி நிறக் காரிலிருந்து இறங்கினர். நெடிதுயர்ந்த ஆகிருதியுடன் கம்பீரமான தோற்றப் பொலிவு கொண்டு அவர் தோன்றி ஞர். “பிஸ்கட் கலர் சில்க் ஜிப்பா எழிலூட்டியது. மைனர் சங்கிலி மின்னியது. ஜரிகைவேட்டி சலசலக்க நடந்தார். அந்திமந்தாரைப் பூக்களை வருடிவிட்டவராக நடந்தார்.

குவிந்த பூங்கரங்களுக்கு மத்தியில் அவரை வணங்கி எழிலான சிரிப்புடன் வரவேற்றாள் தலைமைப் பொறுப்புக் குரிய அம்மாள். காற்றில் அலைந்த சுருள் முடிகளை அடக்கிய படி, அவருக்கு உரிய ஆசனத்தைக் காட்டினள்.

சொக்கநாதன் உட்கார்ந்தார்.

தா. ம. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/25&oldid=664066" இலிருந்து மீள்விக்கப்பட்டது