பக்கம்:தாய் மண்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சொல்லிக் கொள்கிறேன்!...” தலைவி இன்னும் ஏதோ கூறத் துடித்தாள். ஆல்ை, கூறவில்லை. உங்களுடைய தியாகத்தைப் போற்றி, உங்களுக்கும் தமிழரசிக்கும் கல்யாணம் நடக்கும் போது, பெரிய விருந்து ஒன்று வைக்க வேணும்னு ஆசையாக இருந்தேன்! ஆன, அதுக்குள்ளே நீங்க இப்படிச் சோதனை செஞ்சிட்டீங்களே?’ என்று பேசிவிடத் துடித்த துடிப்பு அந்தத் தாய் உள்ளத்துக்கன்றாே தெரிய முடியும்? . நன்றியுடன் மீண்டும் வணங்கின்ை அவன்.

ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்தீங்களா?’ என்று மோகன்தாஸிடம் குழைவுடன் விசாரித்தாள், தமிழரசி,

போயிட்டுத்தான் வந்தேன். அநேகமாய் இன்னும் சில நாளையிலே, இந்தக் கைப்பிடிகள் இல்லாமலே, சரளமாக நான் நடக்கலாம்னு சொன்னங்க!’ என்று குதுகலப் பொலிவுடன் கூட்டிஞன் மோகன்தாஸ். ‘டாக்டர்கள் தேற்றிச் சொல்கிறதாட்டம் நான் சுதந்திரமாக நடக்க முடிஞ்சிட்டால், அப்புறம் எனக்குள்ள பாரமும் கவலையும் மின்னல் வீசி மறைகிற நேரத்துக்குள்ளே இருந்த இடம் தெரியாமப் போயிடும்!” என்று தொடர்ந்தான் அவன்.

தமிழரசி, “ரொம்ப மகிழ்ச்சிக்குரிய தாக்கல் இது! நீங்க ப்யப்படத் தேவையில்லிங்க... உங்க இஷ்டப் பிரகாரமே நீங்க இனி தனியாவே நடந்திடலாமுங்க!” என்று ஆறுதல் மொழிந்தாள், தமிழரசி.

தலைவியிடம் மோகன்தாஸ் விடை வாங்கிச் சென்றதும், தலைவிவும் எழுந்தாள். கால்கள் மரமரத்துப் போனதால், கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அவள் எழும்ப வேண்டியதாக இருந்தது. தமிழரசியின் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலிப் பதக்கத்தை தொட்டு மகிழ்ந்தபின், “அப்புறம் என்னம்மா!...’ என்று கேட்டாள். எதையோ சொல்லவும், எதையோ கேட்டுக் கொள்ளவும் விழைந்தவளாக அவள் போக்கு தெரிந்தது. -

ஆனல், தமிழரசியோ வாய் திறக்கக் காணுேம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/250&oldid=664067" இலிருந்து மீள்விக்கப்பட்டது