பக்கம்:தாய் மண்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25i

“உன் மனக் கஷ்டங்களினலேதான் நீ இல்லத்துக்கு வராமல் இருந்திட்டே. இப்படியே இருந்தால் அப்புறம் என்னம்மா ஆகிறது?... மனநோய் பொல்லாததம்மா!... மோகன்தாஸ் சந்திப்பு உண்டாகிறதுக்கு முன்பாக ஒரு நேரம் உன்கிட்டே டயம் கேட்டேனே, அந்த வேண்டுகோளை மறு படியும் புதுப்பிச்சுத் தா அம்மா!... நானும் அன்பர் சொக்க நாதனும் கலந்து ஒரு நல்ல வரளுகச் செட்டில் செய்திடுருே மம்மா!...’ என்று கெஞ்சினுள், இல்லத்தின் தாய்.

தமிழரசியின் ரத்த ஒட்டத்தில் புதிய ஊற்றுக்கண் திறந்தது. ‘அம்மா, என்னைப் பெரிய மனத்துடன் பொறுத் தருளுங்க. நீங்க என் மதர்!... நீங்களே தரன் எனக்கு வழி காட்டும் தெய்வம்! ஆகவே, உங்க மாதிரியாகவே நானும் கன்னியாகவே இருந்து என்னல் ஆன சமுதாய சேவை செஞ்சு, உங்களைப் போலப் புனிதமானதொரு சமூக அந்தஸ்தைப் பெற்று, என்னுடைய மீதிக் காலத்தையும் கழிச்சிடுறேனுங்க... மதர்!...” என்று வைராக்கியத்தின் மலர் தொடுத்தாள். எடுப்பான மூக்கின் இருபகுதிகளையும் தடவி விட்டுக் கொண்டாள். நுனியில் சிவப்புக் கட்டியது. இந்தச் சமுதாயம் எனக்கு அளித்திருக்கின்ற நல்ல பெயரையும், உயர்ந்த அந்தஸ்தையும் நான் என் வாழ்நாளின் கடைசி வரைக்கும் காப்பாற்றிக்கொண்டு, அந்த உயர்ந்த கவுரத் துடனும், அந்த நல்ல பெயருடனும் என் கண்களை மூடிவிட வேண்டும் என்று கனவு காண்கிறேனம்மா!’ என்று அடிக்கடி இதயம் திறந்து பேசிய அந்தத் தலைவியின் கனவைத் தமிழரசி இப்போதும் சிந்தை செலுத்தினுள். அவள் பெருமையுடன் தலைவியை நெருங்கிள்ை. -

தலைவியின் அழகிய சிறிய விழிகள் நனைந்திருந்தன. ஆற்றாமையுடனும் பரிதாபத்துடனும் தமிழரசியைப் பார்த்த படி எழுந்தாள். ‘கிறிஸ்துமஸ் அன்றைக்கு நீ என்னுடன் தான் தங்க வேணுமாக்கும்!’ எள்று அன்பால் அவளை ஆன இட்டாள்!... அந்த ஆணையைத் தமிழரசியின் மனத்தில்

தேக்கி வைத்து விட்டு, தலைவி காரைச் செலுத்திச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/251&oldid=664068" இலிருந்து மீள்விக்கப்பட்டது