பக்கம்:தாய் மண்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

ஒரு தம்ளர் பாலுடனும் இரண்டு மலை வாழைப் பழங். களுடனும் அன்றைய இரவுச் சாப்பாட்டை முடித்தாள் தமிழரசி, கதவை அடைத்துவிட்டு, படுக்கையை உதறிப் போட்டாள். ஏதோ நினைவு உந்த, அவள் பீரோவைத் திறந்த போது மோகன்தாஸின் படம் அவள் பார்வையில் தென் பட்டது. அந்தப் படத்தையே இமைக்காமல் ஓரிரு விடிை கள் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, நீள மூச்சுடன் பீரோவையும் மூடினள். இருட்டில் அவள் படுக்கையை அண்டினுள். நடைபாதைக் குழந்தை ஒன்று வீறிட்டுக் கொண்டிருந்தது!

இரவு - பகல் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன.

அறிவு நூல்கள் வந்து கொண்டும், திரும்பிக் கொண்டும் இருந்தன.

தோழிகள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந் தனர்.

அன்று தினம், இல்லத்தில் கிறிஸ்துமஸ் பொழுதைக் கழித்தாள், தமிழரசி. மனச் சாந்திக்காக அவள் தவம் இயற்றிக் கொண்டிருந்த நேரத்தில், தலைவிக்குத் தொை பேசிச் செய்தி ஒன்று வந்தது. அதை அவள் தமிழரசிக்கும் அஞ்சல் செய்தாள். தன் ஆசை அத்தானுடன் மணவறை யில் குந்தி மகிழுவதற்காக, தைப்பெண்ணை உளமார வர வேற்று, வீட்டின் தலை வாசலிலேயே நின்று தவம் செய்து கொண்டிருந்த சுடர்க்கொடி இப்போது மரண வாசலிலே நின்று கொண்டிருக்கிருளாம்!...... o

இதுதான் செய்தி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/252&oldid=664069" இலிருந்து மீள்விக்கப்பட்டது