பக்கம்:தாய் மண்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



விடி மோட்சம்

முப்பது

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாரும் ஆண்டு “ஜாம் ஜாம்’ என்று பிறந்துவிட்டது!

இந்திய - பாகிஸ்தான் நாடுகளின் அடிப்படைச் சிக்கல் களுக்குத் தீர்வு கண்டு, சமரசம் கானும் சமாதானப் பணி வில், பாரதத்தின் பிரதமர் லால்பகதூர் அவர்களும், பாகிஸ் தான் அதிபர் அயூப்கான் அவர்களும் தாஷ்கண்ட் நகரிலே முழுமூச்சுடன் செயற்படத் தொடங்கிவிட்டார்கள்!

செய்தியின் விருத்தாந்தங்களே மிகுந்த கவலையுடனும். கூடுதலான அக்கறையுடனும் வாசித்து வந்தாள், தமிழரசி, அன்று தாய் மண்ணின் மானத்தைக் காக்கும் கடமையில் புயலாய்ச் சீறி எழுந்த அதே லால்பகதூர், இன்று நாட்டின் அமைதியைக் காக்கும் இலட்சியத்தில் தென்றலாய் நிலவி வரும் அந்தப் பண்பை - அந்தப் பொற்பை - அந்தக் கடமையை எண்ணி எண்ணிப் போற்றிள்ை; துதித்தாள்: மகிழ்ந்தாள்: மெய்ம்மறந்த நிலையில் லால்பகதூர் பற்றிய சிந்தனையில் அமிழ்ந்துவிட்டாள், அவள். அந்தச் சிறுபொழு தில் லால்பகதுரரின் தியாகம் செறிந்த செம்மை வாழ்வின் பெரும் சரித்திரத்தை அவள் நினைவு கூர்ந்தாள்!

ஏதோ ஒரு பள்ளியின் விழாவுக்குச் சாஸ்திரியை அழைத் திருந்தார்களாம். சின்னஞ்சிறு உலகம் அது. சிறுவர்களும் சிறுமி வர்களும் குழுமியிருந்தார்கள். தலைமை தாங்கிப் பேச ஆரம்பித் தார் பிரதமர். “என்னுடைய இந்தச் சிறிய உருவத்துக்காகத் தான், சின்னஞ்சிறு பிள்ளைகளாகிய உங்கள் முன்னே பேசு வதற்கு என்னைத் தேர்ந்தெடுத்து வரவழைத்திருப்பீர் களென்று நம்புகிறேன்!” என்றாராம். இப்பேச்சை அவள் கடைசியாக எண்ணி முடித்தாள். கண்களில் மகிழ்ச்சிக் கண்ணிர் ஊற்றெடுத்தது. - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/253&oldid=664070" இலிருந்து மீள்விக்கப்பட்டது