பக்கம்:தாய் மண்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

தன் கை வண்ணத்தால் உருவான ‘அம்மன் ரதம்” புள்ளிக் கோலத்தை ரசித்த வண்ணம் புதுமைக் கோலம் தாங்கிப் புறப்பட ஆயத்தமானுள் தமிழரசி,

அரையாண்டுப் பரீட்சைக்கு மாணவிகள் கொடுத்திருந்த விடைத்தாள்களை விடுமுறையில் திருத்தி வைத்திருந்தாள். அவற்றை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள் தமிழாசிரியை. பள்ளியை அடைந்து, வருகைப் புத்தகத்தில் வழக்கம்போலக் கையொப்பம் செய்தாள். “இனிஷியல்அதாவது, தலைப்பெழுத்து இல்லாத தன்னுடைய பெயருக்கு நேராகக் கையொப்பம் செய்தபோது, வழக்கம் போலவே அவள் மனம் பிரளயம் ஆகி அடங்கியது. பிறகு, விடைத் தாள் கட்டுகளைத் தலைமை ஆசிரியையின் அவ்வறையிலேயே வைத்தாள். அங்கிருந்தபடியே அவள் சுடர்க்கொடியுடன் பேசிள்ை. உடம்பு தேறி வருவதாக ஆனந்தத்துடன் சுடர்க்கொடி தெரிவித்தாள்.

மரண வாசல் வரைக்கும் போய்விட்ட சுடர்க்கொடியைக் காப்பாற்ற அவளே சதமென்று அவள் பக்கத்திலேயே நாலந்து நாட்கள் வரை தமிழரசி மனம் ஒன்றி இருந்தாள். ஆண்டவனின் தண்ணளி சுடர்க்கொடியைக் காப்பாற்றியது. அவளை இனிமேல் மணப்பந்தலில் உட்காரச் செய்துவிடுவாள் தமிழரசி புனர்ஜன்மம் எடுத்தவள் போலப் பொலிவுடன் சிரித்த அம்பலவாணனின் அன்பும் பரிவும் எழிற்கொடியான சுடர்க்கொடியை இனி கட்டிக் காத்துக் கொள்ளாதா? தை பதின்ைகில் அம்பலவாணன் - சுடர்க்கொடி திருமணம்! மணப்பெண் தோழி யார் தெரியுமா! - தமிழரசிதான்!... ஆமாம். சாட்சாத் தமிழரசியேதான்!

பள்ளிக்கடமை, தமிழாசிரியை தமிழரசியை நாள் தோறும் அழைத்துக் கொண்டேயிருந்தது!...

பள்ளிக்கூடத்தில் மாலைப் பாடங்களை முடித்துக்கொண்டு. தமிழரசி வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். விளையாட்டு மைதானத்தைக் கடந்து வந்தபோது, சிறுமிகள் “சறுக்கல் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/254&oldid=664071" இலிருந்து மீள்விக்கப்பட்டது