பக்கம்:தாய் மண்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

ததை ரசித்தாள். உள்ளுற மனத்தின் அடிவாரத்தில் பரவி யிருந்த கோபத்தின் சாயல் லேசாக மறைந்து கொண்டிருப் பதாக அவளால் ஊகம் செய்ய முடிந்தது.

மத்தியான்னம் அவள் சாப்பாடு முடிந்து கல்வி ஆலயத் துக்கு வந்து கொண்டிருந்த போது, அவள் ஒரு காட்சியைக் கண்டாள். பெரிய இடத்தைக் சார்ந்த மாணவி ஒருத்தி ஆடம்பரமான ஓர் இளைஞடனுடன் சிரித்துப் பேசிக் கொண் டிருந்தாள். அந்த இளைஞன் அத்து மீறிய அவசரப் போக் குடன் சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். ஒரு நிதானமிழந்த தன்மையை அவனிடமிருந்து அவள் உணர்ந் தாள். அப்போது, அவள் மனத்தில் ஜலஜாவின் பரிதாபநிலை தான் தோன்றியது. ஜலஜாவை ஆசைகாட்டி மோசம் செய்து விட்ட அவளது காதலனை-ஒரு முறை தன்னிடம் நெருப்பு கேட்டு வாயாடி வந்த அந்தப் பாவியைப் பற்றிய பயம்தான் அவளுக்கு ஏற்பட்டது. ஆகவே, இந்தப் பெண்ணுக்கு எச்சரிக்கை செய்துவிட வேண்டுமென்று எண்ணியவளாக அவள் ஸ்கூலுக்குச் சென்றாள். -

அதற்கு ஏற்ற தோதாக, கடைசி வகுப்பு முடிந்ததும், அந்த மாணவி தங்கத்தைத் தனியே அழைத்துப் பேசிள்ை. தன் கவலையையும் அந்தக் கன்னித் தங்கம் மேற்கொள்ள வேண்டிய கவலையையும் உள்ளடக்கி, “தங்கம், உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்குதம்மா! இந்த மாதிரி காதல் வியவகாரத்திலே ரொம்பவும் உஷாராக இருக்க வேணும்!... முதலிலே ஒழுங்காகப் படி. அப்புறம், உங்க வீட்டிலே உன் இஷ்டத்தைச் சொல்லி உன் காதல் விவகாரத்தை முடித்துக் கொள்ள முயற்சி செய், தங்கம்: குப்பை கூளங்களைத்தான் குப்பைத் தொட்டியிலே போட முடியும். பெண்மையின் சிறப்புக்களையும் குப்பைத் தொட்டியிலே போட்டுவிட முடியுமா? கண்ணேப் பார்த்து நடக்காவிட்டால் அப்புறம் விபத்துக்கு உள்ளாக வேண்டியதுதான்!” என்று உலகப் பாடம் போதித்தாள் தமிழ்ப் பண்டிதை,

எட்டத்தில் ஒடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன நாய்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/255&oldid=664072" இலிருந்து மீள்விக்கப்பட்டது