பக்கம்:தாய் மண்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

என்னவோ பதிலுக்குப் பதில் சொல்ல முயன்று, பின் வாயை அடக்கிக்கொண்ட அந்தப் பெண், தன் பேச்சை வேண்டா வெறுப்புடன் ஏற்றுத் தலையை ஆட்டிக்கொண்டு சென்றதை உணர்ந்தாள், தமிழரசி. என்ன பேசத் துடித் தான், அந்த மாணவி?... ஒரு வேளை நானும் அம்பலவாண னும் சிரித்துப் பேசிப் பழகிய சம்பவங்களைக் கண்டு, அதைப் பற்றிச் சொல்லிக் காட்ட எண்ணியிருப்பாளோ? பாவம், அறியாப் பெண். அவள் புத்திக்குச் சொன்னேன். அதைப் புரிந்துகொண்டு பிழைத்தால் தப்பித்தாள். இல்லையேல், இவள் பணம் நாளைக்கு இவள் மானத்துக்கு எவ்வகையில் காப்புக் கொடுக்க முடியும்? என்னைப் போல எச்சரிக்கை யோடும், தற்காப்புணர்வோடும் இவள் நடந்து கொள்ளப் பழகினல் இவளுக்குக் கவலை ஏது? கஷ்டம் ஏது?... அவள் மனம் ஏனே அதிர்ந்தது. அமைதியின்மையின் குமிழ்கள் குறுகுறுத்தன. அந்த மனநிலையுடன் அவள் சறுக்கல் விளையாட்டைப் பார்த்தாள். விளையாட்டிலே சறுக்கி விழலாம், பார்க்கத் தமாஷாகத்தான் இருக்கிறது. ஆனால், வாழ்க்கையிலே சறுக்கி விழுந்துவிட்டால், அது எத்தனை படுபயங்கரமான நிகழ்ச்சியாக ஆகிவிடும்!...

சாவித்திரி பேச்சுத் துணைக்குக் கிட்டினள். இந்தச் சில நாட்களாக அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளை தினத்துக்கொள்ளும் போதெல்லாம் அவள் ஒரு புது விதி யாகத் தன்னுள் நிலவி வருவதை அவள் பூரணமாக அறிந்தாள். அந்தப் புதிய விதியே உண்மையாகவும் அவள் கொண்டாள். இருவரும் பேசிக்கொண்டே நடந்தார் கள். “டிச்சர், உங்களை நினைச்சால், உங்களைப் பார்த்தால் எனக்குப் புது உத்சாகமும் புதுத் தெம்பும் வந்திடுது!” என்றாள் சாவித்திரி. .

தமிழரசி அடக்கமாகச் சிரித்தாள். அச்சிரிப்பு விரக்தி யுடன், ஏமாற்றத்தின் பிடிப்புடன் வெளியேறி விளையாடியது. “டீச்சர்! நீங்கதான் எனக்கு ஒரு அதிசயமாக இருந்து வருறிங்க. உண்மையும் அதுதான்!... நீங்க உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/256&oldid=664073" இலிருந்து மீள்விக்கப்பட்டது