பக்கம்:தாய் மண்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

நிரூபிச்சுக் காட்டிட்டீங்க ஆல்ை, நான் என்னை நிரூபிச்சுக் காட்ட முடியாமல் போயிட்டுதே!...” என்றாள் தமிழரசி, இதயத்தின் இதயத்தில் ஊமைத்தனமான அழுகை ஒப்பாரி வைத்தது.

சாவித்திரி ஒன்றும் பேசத் தோன்றாமல் அவளுடன் தடந்தாள்.

தமிழரசி தன் மாணவிக்குப் புத்தி சொன்ன விஷயங்களை மறக்க முடியாமல் பாதங்களே நகர்த்திக் கொண்டிருந்தாள். மாணவி தங்கம் தன்னிடம் ஏதோ பேச வாயெடுத்த காட்சி அவளது அகத்தை உறுத்திக்கொண்டே யிருந்தது. தன்னையும் அம்பலவாணனயும் பிணைத்து அபவாதம் பேசி ஏசிய அனும தேயக் கடிதமும் அவள் நிம்மதியைக் குலைத்தது.

வெளி முகப்பு வாசலை இலக்கு வைத்து அமைக்கப் பட்டிருந்த நடைபாதையின் இருமருங்கிலும், வண்ணம் நிறைந்த பூச்செடிகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் எழிலை ரசித்தவர்களாக இருவரும் சிறுபொழுது வரையிலும் அங்கேயே நின்றார்கள்.

அப்போது, பின்புறமிருந்து ஏதோ சலசலப்பு விளைந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தார்கள் ஆசிரியைகள் இரண்டு பேர்களும். . .

“டீச்சர், ஒரு நிமிஷம் வாங்க... அந்தப் பக்கம் போயிட்டுத் திரும்பலாம்’ என்று தூண்டினுள், தமிழரசி, பேசிக்கொண்டே அவள் பரபரப்புடன் திரும்பினுள் பள்ளிக் கூடத்துக் கட்டடத்தை நோக்கி. அன்றாெரு நாள், உணவு சாப்பிட்டுவிட்டு, தன் மச்சத்தைத் தொட்டு மகிழ்ந்து, பேசி மறைந்த அந்தத் தாயின் உருவத்தை அவள் தொலைவி - லிருந்தே இனம் கண்டு கொண்டாள். அதனுல்தான், அவள் பரபரப்பு எய்தி விரைந்தாள். தன் மகளுக்கும் எனக்கு இருப்பதுபோல இடது கன்னத்தில் மச்சம் இருப்ப தாகச் சொன்னுள் அவள். மகளைப் பிரிந்ததால்தான் அவள் அன்று அப்படிச் சித்தபேதம் எய்தியவளைப் போலத் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/257&oldid=664074" இலிருந்து மீள்விக்கப்பட்டது