பக்கம்:தாய் மண்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

தெறிக்க ஒடி மறைந்தாளா? குழந்தை பிறந்தவுடனேயே அவள் அதைப் பறி கொடுத்து விட்டாளா? அல்லது, இடை. யில் தான் தாயும் மகளும் பிரிய நேர்ந்ததா? அப்படி. யென்றால், அவள் கணவன் எங்கே?...’ என்ற ஐயப்பாடுகள் எண்ணங்களாக மாறின. எண்ணங்களுக்கு அளவேது?

அந்த அம்மணியாகிலும் தன் பேரில் உரிமை கொண்டாடமாட்டாளா என்று விசித்திரமான ஏக்கத்துடன் முன்னர் தவியாய்த் தவித்த அந்தச் சில கணப் பொழுது களையும் அவள் நெஞ்சில் கொண்டாள். ஆசைக்கு வெட்கம் ஏது? அவள் தீவிரமான துடிப்புடன் நடந்து அக்கூட்டத்தை அணுகிப் பார்த்தாள். அன்றாெரு நாள், தன்னை அனதை என்று விளையாட்டுத் தோழிகள் ஏசியதைச் சகிக்காமல் கிணற்றில் போய் விழுந்து பிழைத்து மறுபிறப்பு எடுத்த அந்த அளுதைச் சிறுமி முத்தழகியை இறுக்கமாகப் பிணேத்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்த அம்மாள். ‘நீதாண்டி கண்ணே நான் பெற்ற மகள். தெய்வம் என்னை அைைத. யாக்கிப்பிடலை உன்னையும் அனதையாக்கிப் பிடலை!’ என்று விழிப்பூ உதிர்த்தாள்.

சிறுமி முத்தழகியின் பால் வதனம் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தது. அவள் அந்தத் தாயையே பரிதாபத்துடன் பார்த்தாள். ‘நாள் உன் மகள் என்கிறதுக்கு ஆதாரம் என்ன?’ என்று மேலெழுந்த குரலில் கண்டித்துக் கேட்டாள்.

“தெய்வமே, ஏனம்மா என்னை இப்படிச் சோதிக்கிறே?நீ என் மகள்-நான் பெற்ற மகள் நீ என்கிறதுக்கு உன்னேட இந்தக் கன்னத்து மச்சம் எனக்கு ஆதாரம் ஆன, உன் அம்மா என்கிறதை எப்படியம்மா ரூபிப்பேன்? ஐயையோ தெய்வமே!’ என்று ஒலம் பரப்பிய அவள், உணர்ச்சிப் பெருக்குடன் முத்தழகியின் கழலடிகளைத் தஞ்சமடைந்து அவளே அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள். அப்போது அந்தத் தாயின் மார்பகத்தில் பாலமுதம் சுரந்து பீறிட்டது. மறுகணம், “அம்மா... அம்மா!’ என்று கூவினுள் முத்தழகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/258&oldid=664075" இலிருந்து மீள்விக்கப்பட்டது