பக்கம்:தாய் மண்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

பிறகு, “அப்படியானல், என்ைேட அப்பா எங்கேயம்மா?” என்று கேட்டான்.

‘உன் அப்பாவையா கேட்கறே? இது நியாயமான கேள்விதானம்மா! உன் அப்பா இந்தப் பட்டணத்திலே தானம்மா இருக்கார். உன்னையோ, என்னையோ சொந்தம் பாராட்ட மறுத்துப்பிட்டாரம்மா!... உன் அப்பா பெரிய பணக்காரர்! அதஞலேதான் நம்பளை அவர் ஏறெடுத்துப் பார்க்கக்கூட மறுத்துப்பிட்டார்! சமுதாயத்திலே அவருக்கு. இருக்கிற அந்தஸ்துக்கும் பேருக்கும் புகழுக்கும் குந்தகம் விகளஞ்சிடும்னு பயப்படுகிறார் அவர்! இதயழில்லாத பாவியம்மா அந்த மனிதர்! மனிதரா அவர்?- பனித்தைக் காட்டி மறுபடியும் என்னை ஏமாத்திட நெனச்சார்!.... அவர்கிட்டே நான் பணத்தையா எதிர்பார்த்தேன்?

“ஐயோ! என்னைப் போலப் பலியான கன்னிகள் எத்தனையோ பேர் வறட்டுக் கவுரவத்தோடவும் போலியான சமூக அந்தஸ்தோடவும் இன்னமும் இந்தச் சமுதாயத்திலே உயிர் வாழ்ந்துகிட்டுத்தான் இருக்கிருங்கம்மா!... உன் அப்பாகிட்டே ஓடி, நீ பிறந்தவுடனே உன்னைக் கொண்டு போய்க் காட்டினேன். அவர் தன் வீட்டாருக்குப் பயந்து உன்னைப் பார்க்கக்கூட மறுத்திட்டார். உடனே, அவருக்கும் தெரியாமல் அவரோட வீட்டுக்குள்ளேயே உன்னைக் கிடத்திப் பிட்டு ஓடி வந்திட்டேன்.

“அவர் செஞ்ச தீவினையை நினைச்சு நினைச்சுத்தான் எனக்குப் புத்தி பேதலிச்சிட்டுது. பைத்தியக்கார ஆஸ்பத்திரி யிலே என்னை அடைச்சுப் போட்டுப் பிட்டாங்க! இப்பத்தான் எனக்குச் சுய ஞாபகம் மீண்டுச்சு. உடனே, உன் ஞாபகம் வந்திடுச்சு. நிற்காது நிலைக்காது, மாம்பலத்துக்கு ஓடிப் போய், உன் அப்பன்காரரை விசாரிச்சேன். அப்பவே உன்னை எங்கேயோ அனுதை இல்லத்துக்கு அனுப்பிச். சிட்டதாகச் சொன்னரு! அவரைப் பார்த்து அழுது புலம்பினேன், அவரோட புதுச் சம்சாரம் வந்து என்னைச். சமாதானப்படுத்தி அனுப்பிச்சாங்க. தங்கமான புண்ணியவதி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/259&oldid=664076" இலிருந்து மீள்விக்கப்பட்டது