பக்கம்:தாய் மண்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தலைமை ஆசிரியை உட்கார்ந்தாள். மற்ற ஆசிரியைகளும் உட்கார்ந்தார்கள். நீலப் பாதரசக் குழல் விளக்குகள் துலாம்பரமான வெளிச்சத்தைப் பாய்ச்சின.

வெள்ளே முடிகளை அம்பலப் படுத்தின மின்சார விசிறி கள், கட்டுப்படுத்தும்படிப் பணித்தார் அவர். கரிய பெரிய விழிகள் உருண்டன.

நாட்டின் நெருக்கடி நிலேமைபற்றிப் பேசப்பட்டது. பள்ளியின் சார்பாக ஆயிர ரூபாய் புத்தநிதிக்காக அளிக்க ஆசிரியைக் குழுவினர் விரும்புவதாக சரோஜினி அம்மையார் சொன்னர். -

ச. அது நம்மோட கடமையாக்கும். என் சார்பில் ஒரு ஆயிரம் தருகிறேன். அதையும் ஸ்கூல் பேராலேயே குடுத் திடுங்கம்மா!’ என்றார் அவர். சொல்லிவிட்டு அவர் தலையை மெள்ள உயர்த்தினர்; ஒரு முறை ஆசிரியைகளை ஒரே பார்வையா கப் பார்த்தார். .

ஸ்தாபகரின் அறச்சிந்தையைப் பாராட்டிக் கையொலி எழுப்பினர். : -

இந்தக் கும்பலில் தமிழரசி மாத்திரம் சேரவில்லை. அந்தப் பிரத்தியட்ச உண்மையைச் சொக்கநாதன் கவனிக்கத் தவறவில்லை.

‘அம்மா தமிழரசி என்ன உங்க உடம்புக்கு?’ என்று பவ்யமாகவும் விநய பூர்வமாகவும் வினவினர். -

தமிழரசி ஒதுங்கிய பாவனே, சொக்கநாதன் அவர் களுக்குச் சகஜமாகத் தோன்றவில்லையோ? -

“எனக்கு உடம்பு நலமாகத்தான் இருக்கிறது, ஐயா. உங்கள் கடமையை-நீங்கள் நாட்டுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானம் கொண்ட தொண்டைச் செய்ய முனைந்தீர் யல்பு. உங்கள் f3\ι α ή και ά கள். அது இயல்பு -67 –L கூட. இதற்குக் கையொலி தேவையல்ல என்பது என் கருத்து. ஆகவே தான், நான் ஒதுங்க தேர்ந்தது. ஐயா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/26&oldid=664077" இலிருந்து மீள்விக்கப்பட்டது