பக்கம்:தாய் மண்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

அவுங்க! பாவம்: ரொம்பச் சின்னப் பொண்ணு அது!... அதோட பெருந்தன்மையிலே நமக்கு விடிமோட்சம் கிடைச்சாத்தான் உண்டு.

‘உனக்காக நான் பட்டபாடு கொஞ்சமா, நஞ்சமா?... ஒவ்வொரு பள்ளிக்கூடமாத் தேடிக்கிட்டிருந்தேன், உன்ன!... கடைசியிலே, இத்தனை வருஷம் கழிச்சு, கொஞ்ச முந்திதான் உன்னே என் கண்ணிலே காட்டினுன் கடவுள்!... குழந்தை குட்டிங்களுக்காக ஒரு பக்கம் தவம் இருக்கிருங்க! ஆன. பத்துமாதம் சுமந்து பெத்த உன்னை இப்பாவாகிலும் கண்டுக்கிட முடிஞ்சுதே, அதுதானம்மா எனக்குச் சந்தோஷம்1. உன் அப்பாவை ஒரு நாளைக்குத் துார இருந்து காட்டுறேன்! ஆன, அப்பவே உன் அப்பாரை நீ மறந்துப் பிடணும்! நாம ஏழைங்க!... நமக்கும் ஆசைக்கும் ஒத்து வரவே வராதம்மா: ஏன்னு நாம ஏழைங்க!... அதனுலே தான், இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் அது இதெல்லாம் நம்மளுக்குத் துச்சமாப்படுது: இதுகளை நீ மறந்துப்பிடா தேம்மா!”

அந்தத் தாய்க்குத் தொண்டையை அடைத்தது. தமிழரசி ஒடிப் போய்த் தம்ளரில் பானைத் தண்ணிர் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள்.

அந்த அம்மாள் தண்ணிரை மடமடவென்று குடித்தாள். “இந்தாடி ராசாத்தி, நீயும் கொஞ்சம் குடி!’ என்று மகளுக்கும் பங்கு கொடுத்தாள். பிறகுதான், அவள் தமிழரசியை அடையாளம் புரிந்து கொண்டாள். தமிழரசியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

தமிழரசியின் கண்கள் நிரம்பியிருந்தன. முத்தழகி இனிமேல் அணுதை அல்ல!’ . -

ராசாத்தி முத்தழகியின் இடது கன்னத்திலிருந்த மச்சம் மாலே வெளிச்சத்தில் அற்புதமாக எழில் காட்டியது. .

விவரம் அறிந்த தலைமை ஆசிரியை அங்கு வந்து, இலவச விடுதியில் இருந்த முத்தழகிக்கு ஆதரவான வகையில், அவளைப் பெற்றவளுக்கும் ஒருவேலை போட்டுக் கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/260&oldid=664078" இலிருந்து மீள்விக்கப்பட்டது