பக்கம்:தாய் மண்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

தமிழரசி, “வாங்க டீச்சர், நாம் புறப்படலாம்’ என்றாள், சாவித்திரியிடம்.

‘பரம்பொருளின் ஒவ்வொரு திருவிளையாடலும் இந்தக் கலியுகத்திலும்கூட மகிமையோடுதான் விளங்கி வருகிறது!’ என்றாள் சாவித்திரி.

அப்போது, அவ்வழியே சைக்கிளில் வந்தான் தில்லைக் கூத்தன். அவன் தமிழரசியைக் கண்டதும் இறங்கி, வணக்கம்’ சொன்சூன். அதே நேரத்தில் அந்தப் பக்கமாகச் சென்ற *அந்த உருவ’த்தைத் தில்லேக்கூத்தன் பார்த்ததுதான் தாமதம், உடனே சைக்கிளே ஸ்டாண்ட்’ போட்டு நிறுத் தினன். ‘ராமு!’ என்று அலட்டினன் தில்லைக்கூத்தன்.

ஒரு முறை ஜலஜாவுடன் கை இணைத்து வந்து, தமிழரசி யிடம் நெருப்புக் கேட்டு, தில்லைக்கூத்தனிடம் உதை வாங்கிச் சென்றானே அவன்தான் அந்த உருவம்! ...

தில்லைக்கூத்தனைப் பார்த்ததும் அந்தப் போக்கிரி ராமுவின் முகம் வேர்வையால் நிரம்பிற்று. அடுத்த இமை கொட்டும் நேரத்தில், அவனே நையப் புடைத்துவிட்டான் தில்லைக்கூத்தன். ‘பாவி! உன் பாவத்தால் உச்சரம்மா ஜலஜாவுக்கு நேர்ந்த வினையைப் பார்த்தாயா! ... சீ! நீயும் ஒரு ஜன்மமா?... இன்றல்ல, என்றாவது ஒரு நாளேக்கு நீ” செய்த வினையை நீயேதான் அறுவடை செய்தாக வேணும்!” என்று முழங்கிளுன் தில்லைக்கூத்தன். தமிழரசியின் திசைக்குக் கைகளை ஆட்டியவளுக, அவன் சைக்கிளைச் செலுத்தினன்.

அந்தப் போக்கிரி ராமு குனிந்த தலையை நிமிர்த்தித் தமிழரசியை முறைத்துப் பார்த்தபடி, காலரை உயர்த் திக் கொண்டு சிகரெட்டில் நெருப்பைப் பொருத்திய வண்ணம் வேகமாக நழுவிவிட்டான். - -

‘இனி, கனவிலேகூட உங்ககிட்டே நெருப்பு கேட்க. மாட்டான்!” என்று சிரித்தாள் சாவித்திரி. ... ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/261&oldid=664079" இலிருந்து மீள்விக்கப்பட்டது