பக்கம்:தாய் மண்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

‘கேட்டால் கொடுக்கலாம் என்றுதான் இருந்தேன். போய்விட்டானே, துரோகி!... அவன் நெருப்பே அவனைச் சுட்டெரிக்கும் வினையைத் துரத்தில் வைத்திருக்காது அவன் விதி!...”

தில்லைக்கூத்தனை மீண்டும் தமிழரசி சந்திக்க வாய்த்தது. “விஸ்டர், அந்த ராமு என்ைேட சித்தப்பார் பிள்ளே, எங்கள் இரு குடும்பமும் சண்டை. அவன் தாயின் பேச்சைக் கேட்காமல் தறுதலையாச் சுற்றுகிருன். எங்கள் குடும்பச் சண்டையை எண்ணி ஒதுங்கினல், இந்தப் பாவி மூலம் எங்க குடும்பத்தின் பரம்பரைக் கவுரவம் சீரழிஞ்சிடா துங்களா? அதற்காகத்தான் அவனைக் கண்டித்தேன்!... அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டு விடவேணும். குணம் இல்லாத இந்தக் காலியை எந்தப் பெண் கல்யாணம் செஞ்சுக்கப் போருளோ புரியலை’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

தமிழரசி வீட்டுக்கு வந்து ட்யூஷன் முடித்துக் கொண்டு, சாப்பாட்டை முடித்தாள். ஏதேதோ சிந்தித்த படி, கதவைச் சாத்தித் தாழ் இட்டாள். தொடர்ந்த சிந்தனையின் கிளர்ச்சியுடன் படுக்கையை உதறி விரித்தாள். மருந்து இழந்த தீக்குச்சி ஒன்று தூரத்தில் போய் விழுந்தது. தலைவி வந்திருந்த தருணத்தில், ஊது வத்தி மணத்துக்குக் கனிவுடன் கை கொடுத்த தீக்குச்சி அது! அது அப்போது கவனிப்பாரற்றுக் கிடந்தது. ஆனால், அது ஊதுவத்தியின் மணத்திற்கு ஒரு காரணமாக இருந்த உண்மையை யாரும் மறக்க முடியாது. - . அவ்வுண்மையை எண்ணமிட்டவாறு அவள் படுக்கையில் குந்தினள். சுவரோடு ஒட்டியவாறு, தலையணைகளைப் பதித்து அதில் சாய்ந்து கொண்டாள். தன்னைப் பற்றியும், இல்லத் தலைவியைப் பற்றியும் எண்ணத் தொடங்கிள்ை. அந்நினே வோட்டம் அவள் மனத்தில் மோகன்தாஸைக் கொண்டு வந்து நிறுத்தியது. காலத் தீயின் தகிப்பில் அவள் மனம் திணறியது. சாய்ந்திருந்த அவள் முகத்தைத் தாழ்த்திகுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/262&oldid=664080" இலிருந்து மீள்விக்கப்பட்டது