பக்கம்:தாய் மண்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

தங்கச் சங்கிலியின் பதக்கத்தைச் சுற்றிலும் விழிகளைச் சுழலச் செய்தாள். அரைக் கணத்தில், அவள் மேனி முழுவதிலும் மின் அதிர்ச்சி ஊடுருவிப் பரவியது. நெஞ்சு உயர்ந்து இறங் கியது. அவளது கண்களின் இரு முனைகளிலும் ஈரக்கசிவு இருந்தது. அவள் நிமிர்ந்து அமர்ந்தாள். விரிந்திருந்த ஒரு பத்திரிகையில் கட்டம் கட்டிப் போட்டிருந்த டாக்டர் சிக்மண்ட் ஃப்ராயிடின் தத்துவத்தை அவள் பார்த்தாள் “பாலுணர்ச்சிதான் எல்லாவித மனநோய்க்கும் அடிப்படை யான காரணம்’ என்ற வரிகள் அவள் நெஞ்சில் ஆலவட்டம் சுழன்றன. திகிலுணர்வின் பேதையில் அவள் தலை சுற்றியது. அடுத்த சில விடிைகளுக்குப் பிறகு, அவள் அந்தப் பத்திரிகை யைக் கீழே வீசிவிட்டு எழுந்தாள். விளக்கை அணைத்தாள்.

மூத்தழகிக்குரிய அம்மா படித்த குற்றப் பத்திரிகையின் வாசகங்கள் மின்னலாக அவளுள் கீறிப் பளிச்சிட்டன.

அவள் எதை நினைப்பாள்? எதை மறப்பாள்?

தமிழரசி மெய்;ஒடுங்கி, மனம் ஒடுங்கிச் சித்தர் பாடல் களில் மூழ்கிள்ை!-அவளுடைய போதம் மிகுந்த நயனச் செம்புகள் கண்ணிரைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தன!...

நித்தியமல்லி

முப்பத்தொன்று

காலம் எனும் தேவன் பிரபஞ்சத்தின் சில பொழுது களை, சூ, மந்திரக்காளி’ என்று சொல்லிக் கபளிகரம் செய்து

ஏப்பம் பறித்தான்.

தமிழரசி பள்ளிக்கூடத்தை முடித்துக்கொண்டு, சாந்தோ மூக்குப் புறப்பட்டாள். கஸ்தூரி அன்னை அைைத இல்லத்தின் தலைவி திலகவதி அம்மையாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்தித் தள்ளியது. அதனுல்தான், உடனே புறப்பட் -டான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/263&oldid=664081" இலிருந்து மீள்விக்கப்பட்டது