பக்கம்:தாய் மண்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

“மதர்!’ என்று பாசம் மல்க விளித்துக்கொண்டே, தாயின் மடியில் விழ ஒடும் தலைமகள் மாதிரி ஒடிச் சென்றாள்.

புகைப்படத் தொகுப்புக்களில் முழ்கியிருந்த தலைவி “டக் கென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு ஏறெடுத்துப் பார்த்தாள். தமிழரசியை எதிர்பாராத விதமாகக் கண்ட தும், அவள் அதிசயப்பட்டுப் போனள். அன்புக்கு அதிசயப் பட உரிமை உண்டல்லவா?,

அன்னையைக் கண்டதும் தெய்வத்தையே நேரில் கண்டாற்போல அத்துணை ஆனந்தக் களிப்புக் கொண்டாள் தமிழரசி, ‘உடம்பு வரவர இளைச்சிக்கிட்டு வருதே மதர்?... டாக்டரிடம் மருந்து சாப்பிடக்கூடாதாம்மா?” என்று கவலை தோய வினவிஞள், தமிழரசி, தலைவி விரக்தி யுடன் சிரித்தாள். ‘எனக்கு உடம்புக்கு என்னம்மா வந்தது? ஒன்றுமில்லே!... அது சரி!... என்னம்மா இப்படித் திடுதிப் பென்று வந்திருக்கிறாய்?’ என்று அன்பு புரள-வியப்புப் புரளக் கேட்டாள், இல்லத் தலைவி. ‘போட்டோ ஆல்பத் தைப் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுத் திரும்பிளுள்.

‘இன்னிக்குப் பூரா உங்க ஞாபகம்தான் மதர்!... அது தான் ஒட்டமாக ஓடிவந்து விட்டேன்!” என்றாள் தமிழரசி, பெற்றவளிடம் புதல்வி பெருமையுடன் தன் மனத்தைத் திறந்து காட்டுவது மாதிரி. .

“தமிழரசி! அப்புறம் உன் கல்யாண விஷயமாக உன் மனத்தை நல்ல விதமாக மாற்றிக்கொண்டாயா, அம்மா?” என்று கூடுதலான கவலையுடன் கேட்டாள், தலைவி.

‘எனக்கு ஒரே ஒரு மனம்தானே இருக்குது அம்மா? .. எனக்கு உடைமையான-என் ஆசைக் கனவுக்குச் சொந்த மான-எனது இன்ப லட்சியத்துக்குப் பாத்தியதை பூண்ட அந்த ஒரு மனம் இயற்கையின் வஞ்சனேயாலே குற்றுயிரும் குல உயிருமாகத் துடித்துக்கிட்டிருக்குது. அந்த மனத்தைப் பாவ புண்ணியத்துக்காவது இரக்கப்பட்டு அதன் இஷ்டத் துக்குக் கொஞ்ச காலத்துக்கு ஓய்வு கொள்ளச் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/264&oldid=664082" இலிருந்து மீள்விக்கப்பட்டது