பக்கம்:தாய் மண்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

வேண்டாமா, மதர்? என்னை நல்ல நெறிமுறைகளுடன் வளர்த்ததே நீங்களும் என் மனமும்தானே, அம்மா?... என்னைக் கோபிக்காதீங்க!... நான் உங்க காலடியிலே வாழ்ந்து, உங்க காலடியிலே சாக வேண்டியவள். உங்க மகள் நான் அடுத்த பிறப்பில் கட்டாயம் நீங்க தான் என் தாயாக இருப்பீங்க! நேர்மையான கனவுகளும் நியாயமான குறிக்கோள்களும் வெல்லாமல் போவதில்லைன்னு எனக்கு நீங்கள் சொல்லித் தரலிங்களா, மதர்?... நீங்க எனக்கு எப் போதுமே துணை இருக்கையிலே, எனக்குக் கவலை ஏதுங்க, அம்மா?... இனி, எனக்குச் சமூகப் பணிதான் எதிர்காலம்; பள்ளிப் பணிதான் இனி எனக்கு உலகம்!... இந்த என் முடிவுகள், உங்கள் உதாரண த் தா லே விளைந்தது. தானுங்களே!...

“நீங்க எனக்குச் சின்ன வயசிலே போட்ட உங்க தங்கச் சங்கிலியைப் பாரதப் பிரதமர் விஜயத்தின் போது அவர்கிட்டே நாட்டுப் பாதுகாப்புக்காக அர்ப்பணம் செஞ்சிடத் துடிச்சேன்!... ஆன, உங்களோட இந்த அழியாப் பரிசை என்னிடமிருந்து பிரிக்க மனம் இடம் கொடுக்கலே. ஆனதாலே, நாளைக்கு என்னுலான ஒரு தொகையை உங்க கையிலே கொண்டு வந்து தருகிறேன். அதை முதல் மந்திரி கிட்டே சேர்த்திடுங்க!... இன்னொரு தொகை தருவேன். அது நம்ம இல்லத்துக்கு!...”*

தமிழரசியின் பேச்சைக் கேட்டதும் திலகவதி அம்மை யாருக்குத் திகில் மூண்டது; இதயத்தின் உயிர்ப்பகுதி சலனம் கண்டது. என்னம்மா இது என்னமோ ஊர்ப் பயணம் புறப்படப் போறதாட்டம் ஒரே மூச்சிலே என்னவெல்லாமோ பேசிக்கிட்டிருக்கே!...” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், எதையோ சொல்லத் துடித்தவள் போல் இதழ் களைத் திறந்தாள். மறுகணம் தயங்கியபடி, விழி கலங்கி வாயை மூடிக்கொண்டாள். இரண்டொரு விடிைகளின் இடைவேளை கழிந்தது. “தமிழரசி, இன்னிக்கு இங்கேயே தங்கம்மா!... உங்கிட்டே மனம்விட்டுப் பேசணும். அப்ப

தா. ம. 17 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/265&oldid=664083" இலிருந்து மீள்விக்கப்பட்டது