பக்கம்:தாய் மண்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

தான் என் மனசு அமைதிப்படும். திருவாளர் சொக்க நாதனும் உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்லியிருக்கார். அவரையும் வரவழைக்கிறேன்!” என்று இரந்தாள் தலைவி. அவள் குரல் தழுதழுத்தது. அவள் மேனி மிகவும் நலிந் திருந்தது.

தமிழரசி அதற்குள் எழுந்துவிட்டாள். ‘நாளைக்குக் கட்டாயம் வந்து இங்கே தங்குறேன், மதர்! இன்னிக்கு ஸ்கூல் வேலை கொஞ்சம் இருக்குதுங்க, அம்மா!...” என்று மொழிந்தாள். இல்லத்தின் அன்னேயிடமிருந்து விடை பெற்றுப் புறப்பட்டாள்.

புறப்பட்ட தமிழரசியை மீண்டும் விளித்தாள் தலைவி. அவளை விழுங்கிவிடுபவள் போலப் பார்த்துவிட்டு, “சரி அம்மா!... பத்திரமாகப் போய் வாம்மா!’ என்று அவளது கன்னங்களைத் தன்னுடைய நடுங்கும் கரங்களால் ஏந்தி மகிழ்ந்தவாறு, அவளைப் பிரிய மனமில்லாமல் தவித்துக் கொண்டே அவளை வழியனுப்பி வைத்தாள், அம்மையார். அந்தத் தலைவியின் வலது கண் ஏன் அப்படித் துடிக்கிறது?... சாந்தோமிலிருந்து பாரிமுனேக்கு வந்தாள், தமிழரசி. அம்பிகையைத் தரிசனம் செய்தாள். நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.

அரண்மனைக்காரத் தெருவின் தலைப்பில் மேல் சரகில், பிச்சைக்காரர்களின் வரிசை நெளிந்தது. குஷ்டரோகிகள் பாவம், படுத்துப் புரண்டு கொண்டிருந்தார்கள்.

தமிழரசிக்கு மனம் இருந்தது. ஐந்து காசுகளை வரிசை யாகப் போட்டுக் கொண்டே நடந்தாள்.

நடைபாதைக் குடும்பங்களில் சூழ்ந்திருந்த ஆர்ப்பாட் டங்களை நோட்டமிட்டவளாக நடந்தாள். மூக்கில் சளி வழிய அவள்மீது மோதிக் கொண்ட குழந்தையை அதன் தாயிடம் சேர்ப்பித்துவிட்டு, நடை தொடர்ந்தாள். -

முத்துமாரிச் செட்டித் தெரு வழி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/266&oldid=664084" இலிருந்து மீள்விக்கப்பட்டது