பக்கம்:தாய் மண்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

பறித்து வீசி எறியப்பட்ட முல்லைப் பூக்கள், மண்ணில் நெளிந்த மனிதப் புழுக்களின் கபட வேடக் கூத்துக்களைக் கண்டு வெறுப்படைந்தாற் போன்று, மண்ணைவிட்டு விண்ணைச் சார்ந்து மணம் கூட்டி விளையாடிக் கொண் டிருந்தன.

தமிழரசி வீட்டைத் திறந்து, மின்சார விளக்கின் பொத்தானே அழுத்தினுள். அசதி தீர, நாற்காலியில் இளைப் பாறிள்ை. குளியல் அறையில் முகத்துக்கு வாசனைச் சவுக்காரம் போட்டுத் தேய்த்துக் கழுவி டவலினல் துடைத் தாள். கொடியில் உலர்ந்த உள் பாவாடை, பிரேஸரியை மடித்துப் போட்டாள். துருத்திக் கொண்டிருந்த அரிவாள் மனேயை உட்புறம் தள்ளி வைத்தாள். முன்னறைக்கு மீண்டாள். மேஜை மீதிருந்த விளக்கொளியும் கண்ணுடியும் அவள் முகத்தைச் சித்திரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவள் தன் வதனத்தை ஆழ்ந்து நோக்கிளுள். முகப்பருக்கள் துல்லிதமாகத் தெரிந்தன. அவள் கண்கள் ஒய்யாரமாகத் தாழ்ந்தன. இல்லத் தலைவி பரிசளித்த அந்தத் தங்கச் சங்கிலி, பட்டுக்கரை சேர்த்த விலையுயர்ந்த தடுக்கில் கிடத்தப்பட்டிருக்கும் சிசுவைப் போன்று அழகாகக் கிடந்தது.

அவள் எழுந்தாள்.

தாஷ்கண்ட் பேச்சுக்கள் வெற்றி பெற்ற மாதிரிதான் இனி!

ரேடியோச் செய்திக்காக எதிர் வீட்டில் காது கொடுத்து அவள் காத்திருந்தாள். இன்பச் செய்தி கிடைத்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் பெருமதிப்புக்குரிய பாரதப் பிரதமரும், பெருமதிப்பைச் சுவீகரித்துக் கொண்ட பாகிஸ்தான் அதிபரும் கையொப்பம் செய்து கொண்டார் களாம்! - - -

தமிழரசி ஆனந்தக் கடலாடி மேற்கு முகம் திரும்பினள்.

சாப்பிட வேண்டுமென்று மனம் எண்ணியது.

காலைச் சமையலுக்கான திட்டமும் உருவானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/267&oldid=664085" இலிருந்து மீள்விக்கப்பட்டது