பக்கம்:தாய் மண்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

தமிழரசியின் வீட்டுக்கு வந்தாள் சீதை. ‘டீச்சர், உங்களுக்கு ஒரு பந்தயம் வைக்கப் போறேனுக்கும். இது யார்னு சொல்லுங்க!’ என்று முன்னுரை அமைத்து, தன் உள்ளங்கையில் வைத்திருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினுள், சீதை.

தமிழரசி அப்படத்தைக் கூர்த்த மதி பதித்துப் பார்த்

தாள். இது... உங்க அண்ணுச்சி கல்யாணம் செஞ்சுக்கம் போகிற பெண் பூங்கொடியோட போட்டோ இது!... உங்க அண்ணுச்சியே என்னிடம் சொன்னங்களே! என்று விவரித்தாள்.

மறுகணம், அந்தக் கன்னிப் பெண் சீதை கைகொட்டிச் சிரித்தாள். காதுச் சிமிக்கிகள் கண் சிமிட்டின. ‘ஐயையோ! நீங்க ஏமாந்திட்டீங்க, டீச்சர்! நல்லா உங்களை ஏமாற்றி யிருக்காங்க எங்க அண்ணுச்சி!... இந்தப் படத்திலே இருக் கிறது யார் தெரியுமா?- எங்க அண்ணுச்சியாக்கும். ஒரு வாட்டி டிராமாவிலே பெண் பிள்ளை வேஷம் போட்டு நடிச்சப்போ எடுத்த படம் இது டீச்சர்!...” என்று புதிரை விடுவித்துவிட்டு, வில்லினின்றும் புறப்பட்ட அம்பாகப் பறந்தாள் சீதை!...

தமிழரசி இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே பிரமை தட்டி உட்கார்ந்துவிட்டாள்...

அப்போது, சுசீலா அங்கு வந்து சேர்ந்தாள். ‘அக்கா! உங்ககிட்டே ஒரு பெரிய உண்மையைத் தெரியப்படுத்தத் தான் ஓடோடி வந்தேன்...! நீங்க இனிமே அைைத இல்லீங்க... உங்க அம்மாவும் அப்பாவும் உயிரோடுதான் இருக்காங்க...” என்று நிறுத்தினுள் சுசீலா.

இதுவரை கனன்று கொண்டிருந்த எரிமலை திடுதிப் பென்று அடங்கி ஒய்ந்தாற்போன்று ஒர் இன்பமயமான அமைதியைத் தமிழரசியின் மனம் அங்கீகாரம் செய்து காட்டியது. ‘அப்படியா?... என் உயிரை வேண்டுமானலும் தருகிறேன்... சீக்கிரம் சொல், சகோதரி!’ என்று துடித் தாள் அவள். சுசீலாவின் மெலிந்த கைகளைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/268&oldid=664086" இலிருந்து மீள்விக்கப்பட்டது