பக்கம்:தாய் மண்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

கைகளால் ஏந்திக்கொண்டு பரிதாபமாகக் கெஞ்சிள்ை

தமிழரசி.

‘கஸ்துரி அன்னே இல்லத்தின் தலைவிதான் உங்களைப் பெற்ற அம்மா!... ஸ்ரீமான் சொக்கநாதன் அவர்கள்தான் உங்க அப்பா!... இப்பத்தான் எங்க ஆயா இந்த ரகசியத்தைச் சொன்னங்க!...” என்று முடித்தாள் சுசீலா.

“நிஜமாகவா?...’ என்று தமிழரசி அதிர்ச்சி மிகுந்த அதிசயத்துடன் கேட்டாள். மறுகணம், அவள் சிலையாகச் சமைந்தாள். கண்களில் கண்ணிர் பெருகிக் கொண் டிருந்தது. நெற்றியில் வேர்வை வழிந்து கொண்டிருந்தது. நெஞ்சை அடைப்பது போலிருந்தது. இறுகப் பற்றித் தேய்த்துக் கொண்டாள். அவள் சுயப் பிரக்ஞை பெற்றுக் கண்களைத் திறந்தபோது, சுசீலாவைக் காணுேம்!

சொல்லாமல் வந்தவள் சொல்லாமலே போய்விட்டிருப் பாள் போலும்:

தமிழரசி ஒர் அரைக்கணம் வீறுகொண்டு நின்றாள். மறு விடிை, அவள் சுயநிலைக்குத் திரும்பினள். உடல் நடுங்கியது. புத்தக அலமாரியில் சாய்ந்து விட்டாள்.புத்தகங்கள் சிதறின. இல்லத்திலிருந்து ஞாபகமாக எடுத்துக் கொண்டு வந்த ‘நன்னூல் விருத்தியுரை பிரிந்து கிடந்தது. அதில், நிழற் படமொன்று காணப்பட்டது. எடுத்துப் பார்த்தாள்.

படத்திலே திலகவதி அம்மாளும் சொக்கநாதனும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்- அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் குழந்தை!

அக் குழந்தையை நன்முக உற்றுப் பார்த்தாள் தமிழரசி, “என்னுடைய படமல்லவா இது! ஆஹா நான் சேர வேண்டிய இடத்தில் தெய்வம் என்னை முன்கூட்டியே சேர்த்து விட்டிருக்கிறது!” -

உணர்ச்சிச் சுழிப்புடன் தமிழ்க் கடவுளின் திருமுன்னே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி விசையுடன் எழுந்தாள் தமிழரசி, ‘ஐயனே!... நீ இருக்கிறாய்!... நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/269&oldid=664087" இலிருந்து மீள்விக்கப்பட்டது