பக்கம்:தாய் மண்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

தலைமை ஆசிரியைக்கு முகம் வேர்த்துக் கொட்டியது. சிறு சலசலப்பு விளைந்தது.

பள்ளியின் நிறுவனர் வெகு நயமாகச் சிசித்துச் சமாளித் தார். ‘வாஸ்தவம்தான் அம்மா நீங்க சொல்றது!... எனக்குக் கூட இப்பதான் மட்டுப் படுது!... எஸ். யு ஆர் வின் விபர்லி ரைட்...’ என்றார், மூக்குக்

கண்ணுடியை அவரது விரல்கள் நான்கு தரம் முற்றுகை இட்டுவிட்டன.

நேற்றிக்குத் தாவி மீண்டது கைக்குட்டை.

“கிறிஸ்துமஸ் லீவுக்கு முன்னதாக மீண்டும் சந்திப் போம்!’ என்று சொல்லி எழுந்தார் சொக்கநாதன்.

ஆசிரியைகள் வணக்கம் சொல்லி விடை பெற்றனர். சோக்கநாதன் காசில் ஏறிச் செல்லும் வரை உடன் இருந்தாள் தலைமை ஆசிரியை.

அதற்குள் தம்புச்செட்டித் தெரு-மண்ணடி முனைச் சந்திப்புக்கு வந்து விட்டாள் தமிழரசி,

ஓடி வந்த கார் நின்றது. ‘அம்மா தமிழரசி ஒரு வாட்டி நீங்க எங்க பங்களா வுக்கு வாங்க. முன்னேசு.ட ஒரு தரம் சொன்னேன். என் மனைவி உங்களைப் பார்க்கிறதுக்கு ரொம்பவும் ஆசைப்படுது:” என் ருர் சொக்கநாதன். அன்பின் பாசத்துடன் அவர் வேண்டினர்.

  • ஆகட்டுங்க கட்டாயம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருறேனுங்க!’ என்று பணிவுடன் பதில் சொன்னுள் தமிழரசி. - -

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிக்கொண்ட அந்தக் கார், காரினும் கடிது சென்றது.

அவள் மடங்கித் திரும்பியபோது, தன்னைச் சூழ்ந்து

விலகிய வல்லுறுக் கண்கள் சிலவற்றை அவள் காணத்தவற வில்லை! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/27&oldid=664088" இலிருந்து மீள்விக்கப்பட்டது