பக்கம்:தாய் மண்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

உண்மை!... நீயே சத்தியம்!... ஆமாம்!...’ என்று. உணர்ச்சிப் பெருக்குடன் தேம்பினுள் அவள்.

மிகமிக அபூர்வமானதோர் அழகிய அமைதி புனித. பூமியை நினைவூட்டியவாறு அங்கு அப்போது சூழ்ந்து வந்தது!

கீழே வீழ்ந்திருந்த அந்தப் படத்தைப் பாசத்துடன் எடுத்தாள். மீண்டும் பார்த்தாள். ‘அம்மா!... அப்பா!...”* என்று மாறி மாறி அழைத்தாள். பிறகு, அந்தப் படத்தை. மேஜைமீது வைத்தாள். முருகன் அணிந்திருந்த நீண்ட மல்லிகைச் சரத்தைப் பாதி ஆக்கி அப்படத்துக்கு அணிவித் தாள். கைகளைக் கூப்பி அப்படத்தைக் கும்பிட்டாள் அவள். முகத்தைத் துடைத்துக்கொண்டு அவள் திரும்பினுள். பீரோவைத் திறந்தாள். தாய் மண்ணின் மானம் காத்த வீர ஜவான் மோகன்தாஸின் படத்தை எடுத்தாள். மிஞ்சி யிருந்த பூச்சரத்தை அதற்குச் சூட்டினள். ஒற்றை மல்லிகைப் பூவை அவளது கொண்டைக் கதம்பத்தில் இணைத்துச் செருகிக் கொண்டாள். அந்த வீரத் தமிழ் மகனுக்கு வீர வணக்கம் செலுத்தினுள் தமிழரசி. பூவிழிகள் பூச்சிதறல் களாக நீருகுத்தன.

அவளுடைய டயரியின் ஏடு அவள் இதயத்தை ஏந்தியது. . -

“இன்று எனக்கு ஒரு புனிதம் மண்டிய-பொற்புமிகுந்த நந்நாள் ஆகும்! நான் இனி அைைத அல்லள்!... எனக்கு அம்மா இருக்கிருள்!... அப்பாவும் இருக்கிறார்!... அவர்கள் இருவரும் இதுவரை இருந்தது போலவே திரைமறைவி லேயே இருக்கட்டும்!... அவர்களுடைய சமூக அந்தஸ்துக்கோ, கவுரத்துக்கோ என்னல் இன்னல் விளைய வேண்டாம்! அவர் கள் என் தெய்வங்கள்! ஆமாம்; அவர்கள் என் தெய்வங்கள்!... தெய்வங்கள் திரைமறைவில்தான் இருக்கவேண்டும்!... அப் படியே இருக்கட்டும்!... நான் இனி அஞதை அல்லள்! எனக்கு அப்பா இருக்கிறார்!... அம்மாவும் இருக்கிருள்!..... இனி மேல், நான் “சொ. தமிழரசி!”...... ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/270&oldid=664089" இலிருந்து மீள்விக்கப்பட்டது