பக்கம்:தாய் மண்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

“ஆம்: இன்று என் தவம் பலித்திட்ட சுபநாளும் ஆகும். என் மனத்தின் லட்சியக் கனவு பலித்துவிட்டது - r இதயக் கோவிலில் கொலு வீற்றிருக்கும் என் காதல் தெய்வத்தை இனி எந்த விதியும் அசைக்கவே முடியாது

“ஆஹா! நான் எல்லா வகையிலும் பாக்கியவதியே! “தெய்வமே உன் திருவிளையாடல் மகத்தானதுதான்! அட்டியில்லை!... ஆமாம்; என் பிறவி இனி பொருள் பெற்று விடும்!... தமிழ்க் கடவுளே! உன் கருணையே கருனே!’

இனி அவளுக்குப் பிரளயம் ஏது? மறுகணம், அவள் தனக்குத்தானே சிரி த் து க் கொண்டாள்......

சிரிப்பின் இனிய நாத அலைகள் அவளைச் சுற்றி அலேந்து கொண்டிருந்தன.

மறுகணம் அவள் தனக்குத்தானே அழுது கொண்டாள். அழுகையின் ஒயிலான நாத அலைகள் அவளைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தன!... ...”

சிரிப்பும் அழுகையும் அவளது கனவின் இரு வேறு லட்சிய கேந்திரங்களாக இயங்கி, அவளை அக் கேந்திரங்களின் நாயகி யாக்கிக் கொண்டிருந்தன!...

அவள் கொட்டக் கொட்ட விழித்துக் கொண் டிருந்தாள்.

கால ரதத்தின் பவனி தொடர்ந்து கொண்டேயிருந்தது. சிரிப்பும் அழுகையும் அவளது வாழ்வின் விதியாக அ ை ளுக்குத் துணை இருந்துகொண்டே இருந்தன!

அவள் ஏன் சிரித்தாள்? விதியை வெற்றி கண்டு விட்டாளே என்றா?... அவள் ஏன் அழுதாள்? . வினை அவளிடம் தோற்றுவிட்டதே என்றா?... அவளது செவிகளிலே, ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக் கொண்டிருந்த பாடல் ஒலிக்கத் தொடங்கியது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/271&oldid=664090" இலிருந்து மீள்விக்கப்பட்டது