பக்கம்:தாய் மண்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மேஜைமீது இரண்டு உறைகள் இருந்தன. அவை ரூபாய்த் தாள்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருந்தன. ஒர் உறையில் தேசீயப் பாதுகாப்பு நிதிக்கு’ என்றும், அடுத்த உறையில், கஸ்துரரி அன்னை அைைத இல்லத்துக்கு’ என்றும் குறிப்புக்கள் நேர்த்தியாக எழுதப் பெற்றிருந்தன!...

இன்னமும் விடியவில்லை-பொழுது! தவயோகம் சித்திக்கப் பெற்ற ஞானச் செருக்குடன் தமிழரசி விளங்கிளுள். அவளது அழகு வளர் வதனம் சலன மற்றுத் திகழ்ந்தது. அவளது எழிலார் மார்பகத்தில் அந்தத் தங்கச் சங்கிலி பாங்குற அமிழ்ந்து கிடந்தது!...

நிமிஷங்கள் நெளிந்தன. திறந்திருந்த கதவுகளின் வழியே பத்திரிகை வந்து விழுந்த சத்தத் துடிப்புக் கேட்டதும், விழி விரித்து எழுந்து பத்திரிகையை ஆர்வத்துடன் எடுத்தாள். எடுத்த எடுப்பில் தரிசனம் தந்த பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர் களின் பெரிய அளவுப் படத்தைப் பார்த்ததும், அவள் மட்டற்ற மகிழ்வுடன் அப்படத்தைக் கைகுவித்துப் பக்தி யுடன் வணங்கினுள்!...

புனித சீலர் லால்பகதூர் அவர்கள் எவ்வளவு நிர்மல மாகப் புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறார்! சரித்திரப் புகழ் வாய்ந்த தாஷ்கண்ட் வெற்றியை எண்ணித்தான் அவ்வாறு தாய சிந்தையுடன் புன்னகை புரிகிருரோ!...

சிரிப்பின் மெய்யுணர்வுடன், தமிழரசி தலைப்புச் செய்தியைப் படித்தாள்.

“ஐயோ, தெய்வமே!’ என்ற பயங்கரமான ஒலம் அவளது உந்திக் கமலத்தினின்றும் புறப்பட்டு எதிரொலித்தது. அவள் தன் இருதயத்தை அழுந்தப்பற்றிப் பிசைந்து கொண்டே உயிர்க் கழுவில் துடி துடித்தாள். ‘அம்மா!... அப்பா!’ என்று கதறினள். மறுகணம், அடியற்ற சந்தனமரமாகத் தாய் மண்ணில் சாய்ந்தாள் தமிழரசி, -

அதே தருணத்தில் : இராணுவ வீரன் மோகன்தாஸ் தன்னுடைய இள -மீசையை நீவிவிட்ட வண்ணம், கம்பீரமான மிடுக்குடனும் கண்ணியம் மிகுந்த புளகிதத்துடனும், “தமிழரசி!’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/272&oldid=664091" இலிருந்து மீள்விக்கப்பட்டது