பக்கம்:தாய் மண்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

அன்புடன், பாசத்துடன், பரிவுடன், நிறைவுடன் அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். அவனது வலது கையில் ஒரு கடிதம் மட்டும்தான் இருந்தது!... -

விதி சாய்ந்து கிடப்பதைப்போல - வினை சாய்ந்து கிடப் பதைப் போல - தெய்வமே சாய்ந்து கிடப்பதைப்போலத் தமிழரசி சாய்ந்து கிடந்தாள்!

அவன் கையிலிருந்த அந்தக் கடிதம் நழுவியது. “ஆt... தமிழரசி!” என்று கூக்குரலிட்ட வண்ணம் தரையில் அமர்ந்து, தமிழரசியின் பாதங்களைத் தொட்டுப் பார்த்தான். “ஐயோ, என் தெய்வமே. தமிழரசி’ என்று நெஞ்சு வெடிக்கக் கூவி அழுதான். அவனுடைய நயனங்கள் அழுதன. அந்தம் நிறைந்த அதரங்கள் அழுதன. தெய்வ மாகிவிட்ட அந்த மானுடப் பெண்ணின் நீள் துயிலக் கலைக்க விரும்பாமல், அவன் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டானே? அவன் பார்வை, மெளனமான சோகத்தை விரித்தவாறு ஒதுங்கிக் கிடந்த அன்றையச் செய்தித்தாள்மீது ஊர்ந்தது. “ஐயோ, சாஸ்திரிஜி!” என்று விம்மின்ை. இதழ்க் கங்குகளில் வழிந்தது கண்ணிர். அவன் தன் விம்மலை அடக்கிக் கொண்டான்.

தமிழரசியின் நெற்றிப் பொட்டும், கொண்டைப் பூவும், இதழ் முறுவலும் வாடாமல் களைகட்டித் திகழ்ந்தன.

“தமிழரசி!. தமிழரசி!...” அவளே அழைத்து அழைத்து அழுதான்; அழுது அழுது அழைத்தான்; ஓங்கி ஓங்கி மண்டையில் அடித்துக் கொண் டான். ‘நான் எவ்வளது துர்ப்பாக்கியசாவியாக ஆகி விட்டேன்! ... ஐயோ! என் தெய்வமே!... தமிழரசி! தமிழரசித் தெய்வமே!...” - -

அவன் எழுந்தான்; நடந்தான். காற்றில் அலைக்கழிக்கப்பட்ட அந்தக் கடிதம், தமிழரசி யின் பாதார விந்தங்களில் பச்சைக் குழந்தையாய்க் கிடந்தது. “என் அன்புத் தமிழரசிக்கு,

நீங்கள் என்மீது கொண்டிருக்கும் மகத்தான நேசத்தை எண்ணி மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியின் பெருமிதத் திளைப்பிலேயே என் வாழ்நாளைக் கடத்தி விட வேண்டுமென்றுதான் நான் கனவு கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/273&oldid=664092" இலிருந்து மீள்விக்கப்பட்டது