பக்கம்:தாய் மண்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

வந்தேன். அந்த மகத்தான இன்பக் கனவைப் பவித்திரமான பாசத்தோடு என் வாழ்நாள் பூராவும் காப்பாற்றிக் கொண்டுவிட வேண்டுமென்றுதான் நான் நித்த நித்தம் கவலைப் பட்டேன். தாய் மண் பணி செய்து அதன் மூலம் கால்களை இழந்த என்னைத் தாங்கள் பெருமனம் கொண்டு துணிவுடன் திருமணம் செய்து கொள்ள முன் வந்த அந்த ஈரத்தை என் மனச்சாட்சி அங்கீகரிக்கவில்லை என்னு: டன் நிலத்துவிட்ட ஊனம் என்னுடனேயே இருக்க வேண்டுமென்று நான் முடிவு கட்டிவிட்டேன்!... அதன் காரணமாகவேதான்,நான் அன்று உங்களிடம் ‘பொய்’ சொல்லவும் நேர்ந்தது. ஆனல் அந்தப் பொய்க்கும் வாழ்வு குறுகிவிட்டது; பொய்யின் புனைகதையும் உங்களுக்குப் புரிந்துவிட்டது, என்னு: டைய தங்கை மூலமாக!

இனியும் நான் என்னைக் காப்பாற்றி கொள்ள விரும்பவில்லை.

என் மனச்சாட்சியின் ஜீவனை உங்கள் அன்புதான் இதுநாள் பரியந்தம் உயிருடன் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. இது சத்தியம்! ஆசைக்கு ஒர் அளவில்லை என்பார்கள். அன்புக்கும் அளவு ஏது? இது உண்மை! - ஆகவே, இதோ, என்னை உங்கள் வசம் ஒப்படைத்து விடுகிறேன்.

ஆஹா! என்னைப்போலக் கொடுத்து வைத்தவன். இந்த உலகத்திலே வேறு யார் இருக்க முடியும் ஆம்; நான் கொடுத்து வைத்தவன்தான்! அதனுல்தானே, உங்களை நான் எடுத்துக் கொண்டேன்!... - . அன்புடன், - . ச. மோகன்தாஸ்.” . கணங்கள் மோனத் தவிப்புடன் வழிந்து கொண்

டிருந்தன. .. - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/274&oldid=664093" இலிருந்து மீள்விக்கப்பட்டது