பக்கம்:தாய் மண்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

விடலாமென்று அப்போவெல்லாம் சும்மா இருந்திட்டேன்!... கடைசிலே... ஐயையோ... பாழும் விதி என்னை இப்படிச் சோதிச்சிட்டுதுங்களே!... ஐயையோ... என் தாயே! ... அம்மா தமிழரசி!...” என்று நெஞ்சுலரக் கதறிஞர்கள் குமாரி திலகவதி அம்மையார்.

குமாரி தமிழரசியின் உதடுகள் தெய்வப் புன்னகை காட்டின.

அவள் நித்தியமல்லிகை. அப்போது, பதறித் திணறி வந்து தமிழரசியின் பாதங் களிலே விழுந்தாள், ஆயாள்-கஸ்துனரி அன்னை அனுதை. இல்லத்தின் பழைய ஆயாள் கிழவி. பேச முடியாமல், அழு தாள். அழமுடியாமல், கண்ணிர் பெருக்கினுள். நொந்த மனம் துடித்தது: “உன்னேட ஏங்கின மனசுக்கு ஒரு நிம்மதி கொடுத்திட வேணும்னு யோசிச்சு, ஒரு பொய்யை ராத்திரி எங்க சுசீலா மூலம் உன்கிட்டே அனுப்பினேனே!... நீ அந்தப் பொய்யோட நிறைவிலேயே இப்பிடி மெய்யான அமைதி அடைஞ்சிருப்பேன்னு நான் சொப்பனம்கூட காணலேயே அம்மா?... தெய்வம்தான் என்னைத் துண்டி அப்பிடிப் பொய் சொல்ல வச்சிருக்குமோ?... ஐயோ, தெய்வமே!... இனி உன்னை எந்தச் சென் மத்திலே காணப் போறேனே... அம்மா... தமிழரசி!...” கிழவி பேய் பிடித்த நிலையில் தடுமாறிக்கொண்டே யிருந்தாள். . குமாரி தமிழரசியின் இதழ்கள் அமர முறுவல் சிந்திக் கொண்டேயிருந்தன.

அவள் நித்தியமல்லி. - நிரவிக் கிடந்த பயங்கரச் சோகத்தை ஊடுருவியவாறு, குமாரி தமிழரசியின் அமர யாத்திரை, அந்த அழகிய வாடா மல்லி நிறக் காரில் தொடர்ந்தது-கஸ்தூரி அன்னை அனுதை. இல்லத்தை நோக்கி. -

தமிழரசிக்குக் கொள்ளி வைக்கும் பாக்கியம் மோகன் தாஸுக்குக் கிட்டியது. .

விதிக்கு மட்டும் அழவே தெரியாதோ?... .. அங்கங்கே தாயின் மணிக்கொடிகள் ஆருத் துயரத் துடன் அரைக் கம்பங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.

வாழிய செந்தமிழ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/276&oldid=664095" இலிருந்து மீள்விக்கப்பட்டது