பக்கம்:தாய் மண்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்த அம்பலவாணன் ?

மூன்று

இளம் பிறையின் சீதளக் கதிர்களை ரசித்துக் கொண் டிருந்த தமிழரசி ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டிருந்தாள். கண் கள் மூடியிருந்தன. ஆனல், மனமும் மனக் கண்ணும் திறந்து தான் இருந்தன. கபாலம் சூடேறி வலித்தது. அவள் இப் போது கண்களேத் திறந்தாள். ஆனால், அவளது மனப் பிரச்னைக்கு மட்டிலும் வழி திறக்கவில்லையோ?...

‘பிறப்பு என்றால் அதற்கு ஒரு பொருள், பயன், நோக்கம் வேண்டும். ஆண் ஆகட்டும், அல்லது பெண் ஆகட்டும். அவரவர்களுக்கென்று சொந்தமாகச் சில கொள்கைகள் இருந் தாகவேண்டும். எல்லை இல்லாத வாழ்வு, எல்லை கட்டிக் கொன ளாத வாழ்வு பயனற்றது; பொருளற்றது; நோக்க மற்றது!... வாழ்க்கைக்காக வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் தெய்வம் விளையாடும்!...”- சாயங், காலம் படித்துக் கொடுத்தபோது வகுப்பில் சொன்ன கருத்துக்கள் அப்போது அவளது மனமுடுக்கிலிருந்து அம்பலத் துக்கு வந்தன!

அம்பலவாணனின் கடிதத்தை எடுத்து வைத்துக்கொண் டாள். கடிதத்தின் வரிகள் எதுவும் தெரியவில்லை. மின் விளக்கை நெருங்கிப் போளுள், வாசகங்கள் துல்லியமாகத் தெரிந்தன. வரிவரியாகப் படிக்கப் படிக்க, அவளுக்கு மனத்தை என்னவோ செய்தது. இதுவரை அக்கடிதத்தைப் பலமுறை வாசித்திருப்பாள். ஒவ்வொரு முறையும் குறை ஏதோ விட்டிருப்பது போலவும், அக்குறையை ஏதோ ஒர் உணர்வு தொட்டு நிற்பது போலவும் அவளது உள்ளுணர்வு எடுத்தியம்பியது. அவ்வுணர்வில் உருக்கமானதொரு மந்திர சக்தி ஊடுருவிப் பரவியதையும் அவளால் உணர முடிந்தது. அவ்வுணர்வு, அவளே எந்தவிதமானதொரு முடிவுக்கும் வர வொட்டாமல் தடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/28&oldid=664096" இலிருந்து மீள்விக்கப்பட்டது