பக்கம்:தாய் மண்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

காலையில் ஸ்கூலுக்குப் புறப்படும்போது அவள் செய்த முடிவு என்ன?

முதல் நாள் மத்தியான்னச் சாப்பாட்டுக்கு வந்திருந்த போது, அறையில் அவளுக்காகக் காத்திருந்தது அம்பல வாணனின் தபால், அதைப் பிரித்து, கடிதத்தாளின் தலைப் பில் அச்சிடப்பட்டிருந்த பெயரைக் கண்டதும் அவளுக்கு ஒர் ஆர்வம் உந்தித் தள்ளிலுைம், மேற்படி கடிதத்தைப் படித்து முடிக்கும் வரையிலும் அவள் மனம் கட்டுக் குலேயாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொண்டாள். அவசரம் அவசர மாக மேற்படி கடிதத்தைப் படித்து முடித்ததும், அவள் அதைப்பற்றிச் சுத்தமாகவே மறந்துவிட்ட துறவுப் பாவனை கொண்டு, அதை மடித்து இருந்த இடத்தில் வைத்து விட்டாள். இன்பக் கனவுகூட தூக்க மயக்கத்தில்-உணர்வு கள் அடங்கித் தூங்கும் தருணத்தில்-பார்க்க வெகு ரம்மிய மாகத்தான் இருக்கிறது!’ என்றுதான் அவள் தன்னுள் நினைத்தாள். அப்படித்தான் அன்றையக் குறிப்பாக நாட் குறிப்பில் எழுதவும் செய்தாள். ‘ஒர் இன்பக்களுவைப் போலவே திருவாளர் அம்பலவாணனின் கடிதத்தை நான் கருதி மதிப்பிட வேண்டியவளாக இருக்கிறேன். இன்றையத் தமிழ்ச் சமுதாய அந்தஸ்தின் விசித்திரக் கண்ணுேட்டத்திலே, இத்தகைய ஒரு தீர்மானத்துக்கு நான் வருவதைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் புலளுகவில்லை எனக்கு. அவர் எங்கே? நான் எங்கே?'- இவ்வாறு அவள் முடிவு கட்டிமுடிவு காட்டி எழுதியிருந்தாள்.

ஆணுல், இப்போது அவள் தனக்குத்தானே தீவிரமாக ஆலோசனை செய்து தீர்த்த பிறகு, அப்போது குறித்த வரிகள் தனக்கு வருத்தத்தைத் தருவதாக அவள் உணர லாளுள். இம்மாறுதலுக்குக் காரணம் என்னவென்று பல மாக யோசித்து யோசித்துப் பார்த்தாள். விடிவு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், தலைவலி மட்டும் கிட்டியது. அந்தத் தலைவலி தீர மருந்து எதையும் நாடவில்லே அவள். அதற்குப் பதிலாக, அடுத்த தடவையாகவும் அக்கடிதத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/29&oldid=664097" இலிருந்து மீள்விக்கப்பட்டது