பக்கம்:தாய் மண்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பிரிக்கத் தலைப்பட்டாள். இப்போது மண்டை நோவு டையப் பையக் குறைந்து வருவதாகவே அவளுக்குப் பட்டது.

பட்ட மரம் தளிர்ப்பது போலவும் ஒரு பசுமை படர்ந்தது.

மனம் கொண்டது மாளிகை!

மாடிக்கு வந்தாள். அப்போது, முடவனுக்கும் கொம்புத் தேனுக்கும் உள்ள மகத்தான வேறுபாடுதான் அவள் மனத் தில் மாபெரும் வைராக்கியமாக உருவெடுத்திருந்தது. பேணுவை எடுத்தாள். எடுத்து எழுத முனைவதற்குள், அவள் நாடி விழுந்து விட்டது:


:.*

“வலிய வரும் சீதேவியைக் காலால் எட்டி உதைப்பது போலத்தான் என் செய்கையும் ஆகிவிடும், நான் மிஸ்டர் அம்பலவாணனுக்கு உடன்பாடு தப்பிய பதிலே அனுப்பும் பட்சத்தில்!... அதைப்பற்றி அயலவர் எண்ணுவதைப்பற்றி அல்லது விமர்சிப்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆளுல், என் முடிவின் காரணமாக, அந்த அன்பு உள்ளம் ஏமாற்றம் அடைந்து ஏங்கித் தவிக்காதா?’ என்று அவள் சிந்தனையின் ஒரு பகுதியில் நின்று யோசித்தாள். அப்போது, சிந்தனையின் எதிர்ப்பகுதியிலிருந்து ஆதரவான சிரிப்புக் குரலொன்று எதிரொலித்தது. அந்த அன்பு உள்ளத்தை நீ மகிழச் செய்ய விரும்பினுல், சம்மதம் என்ற ஒரே சொல் லின் மூலம் உன் எதிர்காலத்தை ஒரே விளுடியில் சிறப்பாக மாற்றிக் கொள்ளத் துணிவதுதானே? இப்படிப்பட்ட செளபாக்கியம் கிட்டுவதென்பது உண்மை வாழ்க்கையிலே அபூர்வத்திலும் அபூர்வமல்லவா?... என்று

அந்தக் குரல் கேட்டது. -

இரக்கவுணர்ச்சியின் விளைவாக எழுந்த இருவகை உணர்வுகளைப்பற்றித் தீவிரமாக அவளது கன்னிமனம் சிந்திக்க முனைந்தது. அப்போது, புதிய சிக்கலான விஞ. ஒன்றை அவள் மனச்சாட்சி கொக்கி போட்டுக் காட்டியது.

‘அம்பலவாணன் எங்கே? நீ எங்கே?... அவனிடம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/30&oldid=664098" இலிருந்து மீள்விக்கப்பட்டது