பக்கம்:தாய் மண்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

சரித்திரம் இருக்கிறது! ஆனல் உனக்கு?...- இந்த ஒரு கேள்வி ஓராயிரம் குரல் மாற்றங்களோடு விதியின் தூண்டில் களாக அவளது இதயத்தை-இதயத்தின் இதயத்தைத் துருவித் துருவித் தைக்கத் தொடங்கியது. அவள் தீயிடை மலராளுள். கண்களே மூடிக்கொண்டு விம்மி அழுதுத் துடித் தாள். புலம்பு முத்துக்கள் மாலை தொடுத்தன. தெய்வமே! ஏன் என்னைப் படைத்தாய்? என்று நெஞ்சம் நெக்குருக் கிளுள்.

தெய்வத்திற்குக் கேள்வி கேட்கத்தான் உரிமை உண்டு,

பதில் சொல்ல வேண்டியது மனிதர்களிள் கடமை! இல்லையா?

முகத்தைத் துடைத்துக் கொண்டு திரும்பினுள். வாச வில் இராப்பிச்சை கேட்டான் ஒர் ஏழை. அவள் பிச்சை இட்டாள். அல்ல, அன்பை இட்டாள். அன்பு, சோறு உருக் கொண்டிருந்தது. ‘போதும் தாயே! இன்னிக்கு ராப்பொழு தைக் கழிச்சிடுவேன் நிம்மதியாய்!” என்றான், பிச்சைக் காரன். -

ஆஹா, போதுமென்ற மனம் இவ்வளவு இனிமையாக இருக்குமா, என்ன?

அவனுடைய ம ன த் ைத க் கேட்டதும்-கண்டதும் அப்படியே மலைத்து நின்று மீண்டாள்.

திரும்பவும் அவளுக்கு அக் கடிதம்தான் பார்வையில் சிக்கியது.

ஆமாம்; இந்தக் கடிதத்துக்கு உடனடியாகப் பதில் எழுதி அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால், என்னைப் பேராசைக்காரியாக உருமாறி விடச் செய்தாலும் செய்து விடும் இக்கடிதம்! மெய்தான். அவருக்கு நான் ஏற்றவளல் லள்! ஆனால், அந்த அன்பு மனம் என் பொருட்டுச் சஞ்சலம் அடையப் போகிறது!.. இதுதான் விட்டகுறை-தொட்ட குறை'யின் விபரீதச் சலன விளையாட்டோ?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/31&oldid=664099" இலிருந்து மீள்விக்கப்பட்டது