பக்கம்:தாய் மண்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழரசி பேளுவையும் கடிதத்தாளையும் எடுத்துக் கொண்டு விளக்கு வெளிச்சத்தின் பாதத்தில் சம்மணம் கோலி உட்கார்ந்தாள்.

கடிதம் உருக் கொண்டது.

“அன்பிற்குரியீர்!

உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். ஆளுல், நீங்கள் என்னை இப்படிச் சோதிப்பீர்களென்று நான் களுக் கூட கண்டதில்லையே!

நான் ஊர் பேர் தெரியாத அனுதை. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்: என்னே மறந்து விடுங்கள்: தயை செய்து என்னை மறந்து விடுங்கள்! பெரு மனம் கொண்டு என்னை மன்னித்தும் விடுங்கள்!

ஆளுல், ஒன்று: உங்கள் துர்ய அன்பை நான் இப்பிறவியில் மறக்கவே மாட்டேன்; என்னுல் அவ்வன்டை மறக்க வும் முடியாது. ஏனென்னல், அந்த அன்புதான் எனக்குத் தெய்வம்!

அந்தத் தெய்வம்தான் என் விதி:

இப்படிக்கு, தமிழரசி,”

அச்சிடப்பட்ட சட்டத்தின் விதியைப் படிப்பதுபோல அவள் அக் கடிதத்தைத் திருப்பிப் படித்தாள். அதை உறையி லிட்டாள்; ஒட்டினுள். விலாசம் எழுதினுள். ஆரம்பமான சுவட்டிலேயே முடிந்து விட்ட ஒரு கதையின் சோகக் கடிதத்தை உள்ளங்கைக்குள் அவளால் அடக்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், அவளது பெண் மனம் அவளேயும் மீறித் துடித்தது; துவண்டது! மனச்சுமையை இறக்கி வைக்கக் கண்ணிரைச் சுமைதாங்கி ஆக்கிளுள். அழுதாள்: அழுது கொண்டே இருந்தாள்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/32&oldid=664100" இலிருந்து மீள்விக்கப்பட்டது