பக்கம்:தாய் மண்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

சுழல் விளக்கின் ஒளி மாடியில் வீசியது; வீசிய போக்கி லேயே மறைந்து விட்டது.

அவளைப் பெயரிட்டு யாரோ அழைத்தார்கள். குரலின் அழைப்பு படிதாண்டி மேலே வந்தது. அவள் கீழே வந்தாள். சேலைத் தலைப்பில் அவள் சுமை இறங்கியிருக்க வேண்டும். கீழே நடைபாதைக் குடும்பத்தைச் சேர்ந்த சீதைதான் கூப்பிட்டாள்.

‘அக்கா, சாப்பிடலிங்களா அக்கா?’ என்று பரிவுடன் விசாரித்தாள். ... .

“சாப்பிட வேண்டியதுதான்!” என்றாள் தமிழரசி. குரலில் ஜீவன் இல்லை.

“'என்ன அக்கா, ஒரு மாதிரி பேசுறீங்க?” ‘ஒண்ணுமில்லெம்மா...’ சீதை நகர்ந்தாள். ‘நில்லம்மா!’ என்று சொல்லி உள்ளே சென்று மீண் டாள், பள்ளி ஆசிரியை, அவள் கையில் குழம்பு நிரம்பிய கிண்ணம் இருந்தது, நீட்டினுள். சீதை வாங்கிக் கொண்டாள். ‘உங்க அப்பாருக்கும் ஆயாளுக்கும் இப்ப எப்படி. உடம்புக்கு இருக்குது, சீதை?’ என்று பாசத்துடன் கேட் உாள்.

‘'இப்ப பரவாயில்ல. நாளைக்குச் சரியாகிப்பிடும். ஆமா, உங்க அப்பா, அம்மா ஊரிலேயோ இருக்காங்க அக்கா?’ என்னும் கேள்வியை அவளிடம் சமர்ப்பித்தாள் சீதை, -

s

“நான் அனதை, தாயே!......” என்று கட்டுப்படுத்த முடியாத வேதனையின் ஆற்றாமையுடன் விம்மினுள் தமிழரசி. துன்பத்தின் உருக்கம் கண்ணிரானது.

“அப்பிடிங்களா அக்கா! ஐயோ, பாழுந்தெய்வமே!’ என்று ஏழைப்பெண் சீதை அனுதாபப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/33&oldid=664101" இலிருந்து மீள்விக்கப்பட்டது